பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான், இப்போது ‘கிங்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை ‘பதான்’ படத்தை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார். இதில் தீபிகா படுகோன், அபிஷேக் பச்சன் உள்பட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு மும்பையில் உள்ள கோல்டன் டொபாக்கோ ஸ்டூடியோவில் நடந்து வந்தது.
சண்டைக் காட்சியை படமாக்கி வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஷாருக்கானுக்கு காயம் ஏற்பட்டது. காயம் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. அவர் சிகிச்சைக்காகத் தனது குழுவுடன் அமெரிக்கா சென்றுள்ளார்.
இதுபற்றி ஷாருக்கான் தரப்பில் கூறும்போது, “ஆபத்தான காயம் ஏதுமில்லை, தசைப்பிடிப்புதான். சண்டைக்காட்சிகளில் ஷாருக்
கானுக்கு இதுபோன்று பலமுறை காயம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அடுத்து நடக்க இருந்த படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.