ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள அபுஜ் மாத் வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் நேற்று முன்தினம் மவோயிஸ்ட்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மறைந்திருந்த மாவோயிஸ்ட்கள் துப்பாக்கி யால் சுட்டுள்ளனர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில், 6 மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர்.
அவர்களிடமிருந்து ஏகே-47 மற்றும் எஸ்எல்ஆர் ரக துப்பாக்கிகள், வெடிபொருட்கள் உள்ளிட்டவற்றை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் தப்பி ஓடிய மற்ற மாவோயிஸ்ட்களை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.