Last Updated : 18 Jul, 2025 06:57 AM
Published : 18 Jul 2025 06:57 AM
Last Updated : 18 Jul 2025 06:57 AM

புதுடெல்லி: ஸ்வச் சர்வேக் ஷன் திட்டத்தின் கீழ் கடந்த 2016-ம் ஆண்டு முதல் இந்தியாவின் தூய்மையான நகரங்கள் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. இதன்படி 2024-25-ம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
இதில் நாட்டின் தூய்மையான நகரங்களில், ம.பி.யின் இந்தூர் 8-வது முறையாக முதலிடம் பிடித்துள்ளது. இதையடுத்து குஜராத்தின் சூரத் இரண்டாவது இடத்தையும் மகாராஷ்டிராவின் நவி மும்பை மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
இதையடுத்து 3-10 லட்சம் மக்கள் தொகை பிரிவில் உ.பி.யின் நொய்டா முதலிடம் பிடித்துள்ளது. சண்டிகர் யூனியன் பிரதேசம் 2-வது இடத்தையும் கர்நாடாகவின் மைசூரு 3-வது இடத்தையும் பிடித்துள்ளன.
டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் இதற்கான விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் 78 விருதுகளை அவர் வழங்கினார்.
FOLLOW US