Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 18
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»“ரஜினி ‘பாட்ஷா’வாக நடிக்கவில்லை; மாறினார்” – இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா புகழாரம்!
    சினிமா

    “ரஜினி ‘பாட்ஷா’வாக நடிக்கவில்லை; மாறினார்” – இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா புகழாரம்!

    adminBy adminJuly 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “ரஜினி ‘பாட்ஷா’வாக நடிக்கவில்லை; மாறினார்” – இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா புகழாரம்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ரஜினிகாந்த் ‘பாட்ஷா’வாக நடிக்கவில்லை, மாறினார் என்று இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

    சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான ‘பாட்ஷா’ படம் வெளியாகி இன்றுடன் 30 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு சுரேஷ் கிருஷ்ணா தனது எக்ஸ் தளத்தில் சில பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில் “ஒரு புகழ்பெற்ற படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆனதை கொண்டாட வேண்டிய நேரம் இது.

    அன்பான பார்வையாளர்களே, ‘பாட்ஷா’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு நன்றி. முன் எப்போதும் இல்லாத வகையில் இப்போது 4கே டால்பி அட்மாஸில் மாற்றப்பட்டு வெளியாகி இருக்கிறது. பெரிய திரையில் மாயாஜாலத்தை தவறவிடாதீர்கள். அன்புள்ள ரஜினி சார். ‘பாட்ஷா’வுக்கு காரணம் நீங்கள் தான். உங்கள் அற்புதமான நடிப்பு, உங்களது திரை ஆளுமை. நீங்கள் பாட்ஷாவாக நடித்தது மட்டுமல்ல, பாட்ஷாவாகவே மாறினீர்கள். இப்போதும் திரையுலக வரலாற்றில் படத்தின் பெயர் பொறிக்கப்பட்டதற்கு காரணம் நீங்கள் தான்.

    புகழ்பெற்ற பாட்ஷா குழுவான ஆர்.எம்.வி சார், ரஜினி சார், நக்மா, ரகுவரன், தேவா, வைரமுத்து, பி.எஸ்.பிரகாஷ், மேகி, கணேஷ் – குமார், பாலகுமாரன், ராஜு மாஸ்டர் மற்றும் அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவிற்கு நன்றி. ஒரே ஒரு பாட்ஷா மட்டுமே. அது நமது ‘பாட்ஷா’ மட்டுமே” என்று தெரிவித்துள்ளார்.

    சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான ‘பாட்ஷா’ திரைப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படமாகும். இதன் காட்சியமைப்புகள், ரஜினியின் வசனங்கள் என அனைத்துமே இப்போதும் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இன்று ‘பாட்ஷா’ வெளியாகி 30 ஆண்டுகள் ஆனதை ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.

    #BaashaTurns30

    It’s time to celebrate 30 glorious years of an iconic film!

    Thank you, dear audience, for making Baasha a legend

    Now experience it like never before — in stunning 4K Dolby Atmos.

    Re-releasing in theatres today! Don’t miss the magic on the big screen! …


    — sureshkrissna (@Suresh_Krissna) July 18, 2025



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    விஜய் சேதுபதியின் ‘தலைவன் தலைவி’ ட்ரெய்லர் எப்படி? – திருமண பந்தமும் பிரிவும்!

    July 18, 2025
    சினிமா

    ஓடிடியில் ஜூலை 19-ல் ‘டி.என்.ஏ’ ரிலீஸ்

    July 18, 2025
    சினிமா

    மீண்டும் தொடங்கியது ‘பராசக்தி’ படப்பிடிப்பு

    July 18, 2025
    சினிமா

    இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்

    July 18, 2025
    சினிமா

    சசிகுமாரின் ‘ஃப்ரீடம்’ ரிலீஸ் எப்போது? – படக்குழு விளக்கம்

    July 18, 2025
    சினிமா

    நானியுடன் இணையும் மோகன்பாபு!

    July 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இஸ்லாம்பூரின் பெயர் ஈஷ்வர்பூர் என மாற்றப்படும்: மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் அறிவிப்பு
    • அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடுக்கிவிடப்பட வேண்டும் என்பதில் உக்ரைனுடன் உடன்படுகிறேன் – புதின்
    • ‘நான்கரை ஆண்டுகளில் கிடைக்காத தீர்வு 45 நாட்களில் கிடைக்கும் என்பது நகைச்சுவை’ – டிட்டோ ஜேக் நிர்வாகி பேச்சு
    • வயதானவர்களுக்கு ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருக்க சிறந்த 5 வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நீதிபதி வர்மா பதவி நீக்க தீர்மானத்தை கொண்டுவருவது அரசு அல்ல: மத்திய அமைச்சர் விளக்கம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.