சென்னை: காணொலிக் காட்சி மூலம் இன்று நடந்த திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்
இன்று (17.07.2025) காலை, காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் குறித்து தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ‘ உறவென விருந்தோம்பல் வழங்கி, ஓரணியில் தமிழ்நாடு எனக் கைகோக்கும் குடும்பங்கள்!
“எனது கணவர் மாற்றுக்கட்சியில் கிளைச் செயலாளர். அவரைத் தவிர எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லோரையும் தி.மு.க.,வில் இணைத்துக் கொள்கிறோம்” எனக் கரூர் மாவட்டத்தில் நிகழ்ந்தது, தமிழ்நாட்டின் உணர்வாகி, உடன்பிறப்புகள் பெருக வேண்டும் என மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தினேன்’ எனத் தெரிவித்துள்ளார்.