பாக்தாத்: ஈராக் நாட்டில் அல் குட் நகரில் உள்ள ஒரு பல் அடுக்கு கொண்ட வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த தீ விபத்தை அல் குட் நகர் அமைந்துள்ள வாசிட் மாகாண ஆளுநர் முகமது அல் மியாஹி உறுதிப்படுத்தியுள்ளார்.
“வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50-ஐ தொட்டுள்ளது. நிறைய பேர் காயமடைந்துள்ளனர். விபத்துக்கான காரணம் உடனடியாக உறுதியாகவில்லை. இன்னும் 48 மணி நேரத்துக்குள் முழு விவரங்கள் பகிரப்படும். இப்போதைக்கு கட்டிட உரிமையாளர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது” என்று ஆளுநர் முகமது அல் மியாஹி கூறியுள்ளார்.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் வணிக நிறுவனம் ஒன்றில் தீ கொளுந்துவிட்டு எரியும் காட்சிகள் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது. ஆனால் இந்த வீடியோ ஈராக் வணிக வளாக விபத்து வீடியோதானா என்பதை இன்னும் அரசுத் தரப்போ / ஈராக் ஊடகமோ உறுதி செய்யவில்லை.