புதுடெல்லி: திருப்பதி நரசிம்ம முராரி என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், “அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சியின் சட்டதிட்டங்கள் முஸ்லிம் சமூகத்தின் நலனை மட்டுமே ஆதரிக்கிறது.
இது இந்திய அரசியலமைப்பின் அடிப்படையான மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிரானது. எனவே அக்கட்சியின் பதிவை ரத்து செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை தள்ளுபடி செய்ததை தொடர்ந்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதிகள் சூர்யகாந்த், ஜாய்மால்யா பாக்சி அமர்வு, “ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் மீது மட்டும் குற்றம் சுமத்தாமல், தேர்தல் சீர்திருத்தம் என்ற கோணத்தில் பொதுநல மனுவாக தாக்கல் செய்தால் பரிசீலிக்கலாம்.
எனவே, இந்த மனு நிராகரிக்கப்படுகிறது. அதேநேரம் வகுப்புவாதத்தைப் போலவே பிராந்தியவாதத்தை ஊக்குவிப்பதும் ஆபத்தானது” என்றனர்.