கிராமி விருது பெற்ற இசைக் கலைஞர்களான ரிக்கி கேஜ், சீன-அமெரிக்க இசைக்கலைஞரான டினா குவோ, ஜப்பானிய இசைக் கலைஞரான மசா டக்குமி ஆகியோர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தியுடன் இணைந்து ஆல்பம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள ‘காந்தி மந்த்ராஸ் ஆஃப் கம்ப்பேஷன்’ என்ற இந்த ஆல்பம் சமீபத்தில் வெளியானது.
இதுகுறித்து ரிக்கி கேஜ் கூறும்போது, “மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் முதல் நெல்சன் மண்டேலா வரை பல தலைமுறைகளின் தலைவர்களுக்கு காந்தி, உந்துசக்தியாகத் திகழ்கிறார். அவருடைய தத்துவ ஜோதியை அணையாமல் காப்பதற்கான எங்களது சிறிய காணிக்கையே இந்த ஆல்பம். மகாத்மா காந்தியை போன்று எல்லைகளைக் கடந்து தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தி இசைக்கும் உள்ளது” என்றார்.
லோனி பார்க், ஜோர்டன் புட்டோவ், கைலாஷ் சத்யார்த்தி, வானில் வெய்காஸ் ஆகியோர் தயாரித்துள்ள இந்த ஆல்பத்தை சுமதி ராம் இணை தயாரிப்பு செய்துள்ளார்.