யூடியூப் மூலம் பிரபலமான ‘ஃப்ராங்க்ஸ்டர்’ ராகுல், இயக்குநராக அறிமுகமாகும் படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது.
இந்தப் படத்தில் எம்.எஸ். பாஸ்கர், ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் முதன்மை வேடங்களில் நடிக்கிறார்கள். ஸ்மீகா, அருள்தாஸ், முனீஸ்காந்த், ஸ்ரீநாத், சிவா அரவிந்த், பிரியதர்ஷினி, அஞ்சலி ராவ், அபிநயா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்கிறார்.
இதைக் குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் புவனேஷ் சின்னசாமி தயாரிக்கிறார். மெட்ரோ முரளி, மெட்ரோ கிரி ஆகியோர் இணை தயாரிப்பு செய்கின்றனர்.