சென்னை: பொது இடங்கள், நீர்நிலைகளில் மருத்துவக் கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கும் சட்டம் அமலுக்கு வந்தது. கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.
இதன்ஒரு பகுதியாக கடந்த ஜூன் மாதம் 5 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். அதில், உயிரி மருத்துவக் கழிவுகளை குவித்தல், அண்டை மாநிலங்களில் இருந்து கொண்டுவந்து கழிவுகளை கொட்டுவோர், குவித்து வைப்போர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யும்மசோதாவும் ஒன்று.
இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து சட்டம் அமலுக்கு வந்த நிலையில் இந்த சட்டத்திருத்தம் ஜூலை 8-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழக அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.