சென்னை: சென்னையில் இண்டியம் சாப்ட்வேர் ஏஐடிஏ ரேங்கிங் டென்னிஸ் போட்டி வரும் 19-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் இப்போட்டி நடைபெறும். ஆடவர், மகளிர் டென்னிஸ் போட்டி மட்டுமல்லாது, வீல்சேர் டென்னிஸ் போட்டியும் இந்த போட்டியுடன் இணைந்து நடத்தப்படும். போட்டியில் 21 மாநிலங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ளவுள்ளனர். வி.எம்.ரஞ்சித், ஓஜஸ் தேய்ஜோ உள்ளிட்டோர் போட்டியில் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.
வீல்சேர் டென்னிஸ் போட்டியில் 26 பேர் பங்கேற்க உள்ளனர். போட்டிக்கான பரிசுத்தொகை ரூ.7 லட்சமாகும். தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.