சென்னை: தமிழகத்தில் பள்ளிகளில் படிக்காமல் தனியார் மையங்கள் உதவியுடன் பயிற்சி பெறும் தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் நடத்தப்படும்.
அதன்படி நடப்பாண்டு 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆகஸ்ட் 18 முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் (ஜூலை 17) நிறைவு பெறுகிறது.
இதையடுத்து தனித்தேர்வர்கள் தேர்வுத்துறை இணையதளத்தில் (www.dge.tn.gov.in) இடம்பெற்றுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கு கட்டணமாக ரூ.195 செலுத்த வேண்டும். இந்த நாட்களில் விண்ணப்பிக்க தவறியவர்கள் தட்கல் முறையில் ஜூலை 18, 19-ம் தேதிகளில் பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களை மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.