கவின் – பிரியங்கா மோகன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்கள்.
‘கிஸ்’, ‘மாஸ்க்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, ‘தண்டட்டி’ இயக்குநர் ராம் சங்கையா இயக்கத்தில் நடிக்கவுள்ளார் கவின். இதன் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ‘கனா காணும் காலங்கள்’ இயக்குநர் கென் ராய்சன் இப்படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தின் பூஜையுடன் கூடிய பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் கவினுக்கு நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளார். இசையமைப்பாளராக ஓஃப்ரோ பணிபுரியவுள்ளார்.
கவின் உடன் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தினை திங்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ‘கனா காணும் காலங்கள்’ தொடர் மட்டுமன்றி, சமீபத்தில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘கட்சிசேர’ வீடியோவையும் இயக்கியவர் கென் ராய்சன். இப்படக்குழுவினருக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.