கலிபோர்னியா: அமெரிக்காவில் நடைபெற்ற மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி எம்ஐ நியூயார்க் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
கலிபோர்னியாவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த எம்ஜ நியூயார்க் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டிகாக் 46 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் விளாசினார்.
181 ரன்கள் இலக்குடன் பேட் செய்த வாஷிங்டன் அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 41 பந்துகளிலும் 70 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 34 பந்துகளில் 48 ரன்களும் சேர்த்தனர்.