ஹராரே: ஜிம்பாப்வேயில் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் ஆட்டத்தில் ஹராரேவில் நேற்று தென் ஆப்பிரிக்கா – ஜிம்பாப்வே அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 6 விக்கெட்கள் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சிகந்தர் ராஸா 38 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் விளாசினார். பிரையன் பென்னெட் 30, ரியான் பரூல் 29 ரன்கள் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஜார்ஜ் லின்டே 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.
142 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 15.5 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரூபின் ஹெர்மான் 37 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 45 ரன்களும், டெவால்ட் பிரேவிஸ் 17 பந்துகளில், 5 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 41 ரன்களும் விளாசினர்.