புவனேஸ்வர்: ஒடிசாவில் ஒருசில பழங்குடி சமூகங்களில் ஒரே குலம் அல்லது கோத்திரத்தை சேர்ந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வது குற்றமாக கருதப்படுகிறது. இந்நிலையில் கோராபுட் மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த ஜோடியை ஏரில் காளைகளை பூட்டுவது போல நுகத்தடியில் பூட்டி கிராம மக்கள் நிலத்தை உழச் செய்தனர்.
அப்போது குச்சியை கொண்டு அந்த ஜோடியை அடிக்கவும் செய்தனர். இது தொடர்பான வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஒடிசாவில் கஞ்சமஜிரா என்ற கிராமத்தில் ஒரு பெண் தனது அத்தை மகனை திருமணம் செய்து கொண்டதற்காக அவர்களை சில நாட்களுக்கு முன் ஏரில் பூட்டி நிலத்தை உழச் செய்தனர். இந்நிலையில் மீண்டும் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.