பால்கர்: மராத்திக்கு எதிராக பேசிய ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய சிவசேனா (உத்தவ் அணி ) தொண்டர்கள் அவரை மன்னிப்பு கேட்க வைத்தனர். மகாராஷ்டிரா மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில், வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் விரார் ரயில் நிலையம் அருகே ஆட்டோ ஓட்டி வந்தார். அவர் சில நாட்களுக்கு முன் மராத்தி, மகாராஷ்டிரா, மராத்தி தலைவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார்.
இதையடுத்து, விரார் ரயில் நிலையம் அருகே நடுரோட்டில், மராத்தி குறித்து அவதூறாக பேசிய ஆட்டோ ஓட்டுநரை பிடித்த சிவசேனா (உத்தவ் அணி) தொண்டர்கள், பெண் தொண்டர்கள், அவரது கன்னத்தில் அறைந்தனர். இதையடுத்து அவர் மராத்திக்கு எதிராக பேசியதற்காக மகாராஷ்டிரா மக்களிடம் மன்னிப்பு கோரினார்.