புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கல்லூரி ஒன்றில், கல்வியியல் துறை் தலைவராக பணியாற்றியவர் சமிரா குமார் சாகு. இவர் மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இது குறித்து கல்லூரியின் புகார் குழுவில் மாணவி புகார் அளித்தார். இது குறித்து உடனடி நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதனால் அவர் நேற்று முன்தினம் தீக்குளிக்க முயன்றார்.
உடனே அருகில் இருந்தவர்கள் மாணவியை காப்பாற்றி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். மாணவி புகார் குறித்து விசாரணை நடத்த உயர்நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் சூர்யபன்ஷி சூரஜ் தெரிவித்தார்.