’பல்டி’ என்ற படத்தின் மூலம் நடிகராக அவதாரம் எடுக்கிறார் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன்
2015-ம் ஆண்டு வெளியாகி இந்தியளவில் அனைவராலும் கொண்டாடப்பட்ட படம் ‘பிரேமம்’. இதற்குப் பிறகு அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய ‘கோல்ட்’ படத்தினை இயக்கினார். இப்படம் பெரும் தோல்வியை தழுவியது. பல்வேறு நடிகர்களிடம் அடுத்த படத்துக்கான கதைகள் கூறிவந்தார் அல்போன்ஸ் புத்திரன்.
தற்போது அல்போன்ஸ் புத்திரன் கதையில் நிவின் பாலி நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இந்த நிலையில் முதல்முறையாக நடிகராகவும் களமிறங்க உள்ளார் அல்போன்ஸ். புதுமுக இயக்குநர் உன்னி சிவலிங்கம் இயக்க உள்ள ’பல்டி’ என்ற படத்தில் ஷேன் நிகம், சாந்தனு இணைந்து நடிக்கின்றனர். இப்படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
இப்படத்தில் சோடா பாபு என்ற கதாபாத்திரத்தில் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் நடிக்க இருப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக அவரது கதாபாத்திர லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.