மாட்ரிட்: உலகக் கோப்பை வில்வித்தை போட்டி ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
இதில் மகளிருக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவில் ஜோதி சுரேகா, பிரனீத் கவுர், பிரித்திகா பிரதீத் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி இறுதிப் போட்டியில் 225-227 என்ற கணக்கில் சீன தைபேவிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றது.
மகளிருக்கான தனிநபர் காம்பவுண்ட் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஜோதி சுரேகா 147-148 என்ற கணக்கில் இங்கிலாந்தின் எல்லா கிப்சனிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.