அட்லி இயக்கவுள்ள படத்தில் 4 கதாபாத்திரங்களில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. எந்தவொரு தகவலோ, புகைப்படமோ கசியக் கூடாது என்பதில் கடும் எச்சரிக்கையுடன் படக்குழு பணிபுரிந்து வருகிறது. தற்போது இப்படத்தில் 4 கதாபாத்திரங்களில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தாத்தா, பையன், 2 மகன்கள் என 4 கதாபாத்திரங்களில் அல்லு அர்ஜுனே நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் நாயகியாக தீபிகா படுகோன் நடிப்பதை மட்டுமே படக்குழு உறுதி செய்திருக்கிறது. அவரை தவிர்த்து ஜான்வி கபூர், மிருணாள் தாகூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் அல்லு அர்ஜுனுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதில் ராஷ்மிகா மந்தனா கதாபாத்திரம் முழுக்கவே வித்தியாசமானதாக இருக்கும் என கூறப்படுகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில் முழுக்கவே ஹாலிவுட்படங்களில் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்கள் பணிபுரிய இருக்கிறார்கள். இதன் பொருட்செலவு என்ன என்பதை படக்குழு முடிவு செய்யவில்லை. இந்தியாவில் தயாராகும் படங்களில் அதிக பொருட்செலவு கொண்ட படம் என்பதை மட்டும் இப்போதைக்கு தெரிகிறது.