லண்டன்: இங்கிலாந்து அணி உடன் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி. இந்தப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த மைதானத்தில் இந்திய அணியின் கடந்த கால செயல்பாடு எப்படி என்பதை பார்ப்போம்.
ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் 371 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 336 ரன்களில் வெற்றி பெற்றது. இதனால் இந்த தொடர் 1-1 என சமனில் உள்ளது. லார்ட்ஸ் போட்டியில் வெற்றி பெறுகின்ற அணி தொடரில் முன்னிலை பெறும்.
லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் செயல்பாடு எப்படி? – vs இங்கிலாந்து
- 25 ஜூன், 1932 – தோல்வி
- 27 ஜூன், 1936 – தோல்வி
- 22 ஜூன், 1946 – தோல்வி
- 19 ஜூன், 1952 – தோல்வி
- 18 ஜூன், 1959 – தோல்வி
- 22 ஜூன், 1967 – தோல்வி
- 22 ஜூலை, 1971 – தோல்வி
- 20 ஜூன், 1974 – தோல்வி
- 2 ஆகஸ்ட், 1979 – டிரா
- 10 ஜூன், 1982 – தோல்வி
- 5 ஜூன், 1986 – 5 விக்கெட்டுகளில் வெற்றி
- 26 ஜூலை, 1990 – தோல்வி
- 20 ஜூன், 1996 – டிரா
- 25 ஜூலை, 2002 – தோல்வி
- 19 ஜூலை, 2007 – டிரா
- 21 ஜூலை, 2011 – தோல்வி
- 17 ஜூலை, 2015 – 95 ரன்களில் வெற்றி
- 9 ஆகஸ்ட், 2018 – தோல்வி
- 12 ஆகஸ்ட், 2021 – 151 ரன்களில் வெற்றி
இதுவரை 19 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து உடன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா விளையாடி உள்ளது. இதில் 12 போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது. இந்தியா 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 4 போட்டிகள் டிரா ஆகியுள்ளன. கடைசியாக இந்திய அணி லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடிய 3 போட்டிகளில் 2 வெற்றி மற்றும் 1 தோல்வி பெற்றுள்ளது.