புதுச்சேரி: மாங்கனி திருவிழாவையொட்டி காரைக்காலில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: காரைக்காலில் உள்ள காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழா கடந்த 8-ம் தேதி தொடங்கி வரும் 11-ம் தேதி வரை நடக்கிறது. பக்தர்கள் மாம்பழங்களை பொழியும் மங்களகரமான மாங்கனி திருவிழா நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.
துணைநிலை ஆளுநர் ஒப்புதலுடன், காரைக்கால் அம்மையாளர் கோயில் மாங்கனி திருவிழாவை கொண்டாட காரைக்கால் பகுதிக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் இந்த விடுமுறைக்கு ஈடாக 19-ம் தேதி சனிக்கிழமை செயல்படும் என தெரிவித்துள்ளார்.