திண்டுக்கல்: போலீஸார் தாக்குதலில் உயிரிழந்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் மீது புகார் அளித்த பேராசிரியை நிகிதா, விடுப்புக்குப் பின்னர் திண்டுக்கல் அரசு மகளிர் கல்லூரிக்குப் பணிக்குத் திரும்பினார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரத்தைச் சேர்ந்த அஜித் குமாரை, தனிப்படை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது மரண மடைந்தார்.
இவர், மீது நகையைத் திருடியதாக புகார் கொடுத்த பேராசிரியை நிகிதா, மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே யுள்ள ஆலம்பட்டியைச் சேர்ந் தவர். இவர், திண்டுக்கல்லில் உள்ள எம்.வி.எம். அரசு மகளிர் கல்லூரி யில் தாவரவியல் துறையின் தலைவராக உள்ளார்.
காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் இறந்த நாள் முதல் கடந்த ஒரு வாரமாக இவர் விடுப்பு எடுத்திருந்ததால் கல்லூரிக்கு வரவில்லை. இந்நிலையில் விடுப்பு முடிந்து நேற்று திண்டுக்கல்லில் உள்ள எம்விஎம் அரசு மகளிர் கல் லூரிக்கு வந்து தனது பணியைத் தொடங்கினார். இதுபற்றி தகவலறிந்த செய்தியாளர்கள் கல்லூரி வளாகத்துக்குள் சென்று பேராசிரியை நிகிதா குறித்து செய்தி சேகரிக்க முயன்றனர்.
பின்வாசல் வழியே வெளியேறினார் இதையறிந்த கல்லூரி முதல்வர் லட்சுமி, பிற்பகல் 3 மணிக்கு வகுப்புகள் முடிந்த பின்பு கல்லூரிக்கு வெளியே பார்த்துக் கொள்ளுங்கள்.
அதுவரை கல்லூரி வளாகத் துக்குள் இருக்க வேண்டாம் என செய்தியாளர்களை கேட்டுக் கொண்டார். இதையடுத்து செய்தியாளர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறினர். மாலையில் கல்லூரி முடிந்த நிலையில், செய்தியாளர்கள் காத்திருப்பதை அறிந்த நிகிதா கல்லூரி பின்வாசல் வழியாக அவசரமாக வெளியேறினார்.