புதுடெல்லி: பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கேரள சுற்றுலாத் துறையை பிரபலப்படுத்தும் நோக்கத்தில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக, பிரபலமான யூடியூபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன்படி, 2024 ஜனவரி முதல் 2025 மே வரையிலான காலத்தில், கண்ணூர், கோழிக்கோடு, கொச்சி, ஆலப்புழா, மூணாறு உள்ளிட்ட நகரங்களுக்கு ஜோதி மல்ஹோத்ரா சென்று வந்துள்ளார்.
இந்த பயணத்துக்கான அனைத்து செலவுகளையும் கேரள சுற்றுலாத் துறை ஏற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) கேட்கப்பட்ட கேள்விக்கு கிடைத்த பதில் மூலம் தெரியவந்துள்ளது.