புதுடெல்லி: டி.வி. தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்மிருதி இரானி. மேலும் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டு கட்சிப் பணியும் ஆற்றிவந்தார்.
பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் 2014 முதல் 2024 வரை ஸ்மிருதி இரானி மத்திய அமைச்சராக இருந்தார். இந்நிலையில் 2024-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது தோல்வி அடைந்ததையடுத்து அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இதையடுத்து அவர் மீண்டும் டி.வி. தொடர்களில் நடிக்க முடிவு செய்தார்.
இதன்படி, தற்போது `கியூன்கி சாஸ் பி கபி பஹு தி: ரீபூட்’ என்ற பெயரில் டி.வி. தொடர் தயாராகி வருகிறது. அதில் ஸ்மிருதி இரானி நடித்துள்ளார். இந்தத் தொடரில் துளசி விர்வானி என்ற கதாபாத்திரத்தில் அவர் தோன்றியுள்ளார்.