செயின்ட் ஜார்ஜ்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
செயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 286 ரன்களும், மேற்கு இந்தியத் தீவுகள் அணி 253 ரன்களும் எடுத்தன. 33 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 4-வது நாள் ஆட்டத்தில் 71.3 ஓவர்களில் 243 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 71 ரன்களும், கேமரூன் கிரீன் 52 ரன்களும் சேர்த்தனர்.
இதையடுத்து 277 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 34.3 ஓவர்களில் 143 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் ராஸ்டன் சேஸ் 34, ஷமர் ஜோசப் 24, ஷாய் ஹோப் 17, பிரண்டன் கிங் 14, அல்சாரி ஜோசப் 13 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்
பில் மிட்செல் ஸ்டார்க், நேதன்
லயன் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், ஜோஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என கைப்பற்றியது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 159 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் போட்டி வரும் 13-ம் தேதி கிங்ஸ்டனில் பகலிரவாக தொடங்க உள்ளது.