Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, February 11
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடங்கியது: பிரேசிலில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
    உலகம்

    பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடங்கியது: பிரேசிலில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

    adminBy adminJuly 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடங்கியது: பிரேசிலில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ரியோ டி ஜெனிரோ: பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நேற்று தொடங்​கியது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடியை உலக நாடுகளின் தலைவர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். முன்​ன​தாக, விமான நிலையத்தில் ஏராள​மான இந்​தி​யர்​கள் திரண்டு மோடிக்கு உற்​சாக வரவேற்பு அளித்​தனர்.

    பிரிக்ஸ் கூட்​டமைப்பு 2009-ம் ஆண்​டில் தொடங்​கப்​பட்​டது. இதில் பிரேசில், ரஷ்​யா, இந்​தி​யா, சீனா, தென் ஆப்​பிரிக்​கா, எகிப்​து, எத்​தி​யோப்​பி​யா, ஈரான், ஐக்​கிய அரபு அமீரகம், இந்​தோ​னேசியா ஆகிய நாடு​கள் உறுப்​பினர்​களாக உள்​ளன. பிரிக்ஸ் கூட்​டமைப்​பின் 2 நாள் உச்சி மாநாடு பிரேசிலின் ரியோ டிஜெனிரோ நகரில் நேற்று தொடங்​கியது. இதில் பங்​கேற்​ப​தற்​காக அங்கு சென்​றுள்ள பிரதமர் மோடிக்கு, ரியோ டி ஜெனிரோ விமான நிலை​யத்​தில் ஏராள​மான இந்​தி​யர்​கள் திரண்​டு, உற்​சாக வரவேற்பு அளித்​தனர்.

    உச்சி மாநாட்​டின் முதல் நாளான நேற்று ‘சர்​வ​தேச அமை​தி, பாது​காப்​பு, சீர்​திருத்​தம், நிர்​வாகம்’ குறித்த சிறப்பு கூட்​டம் நடை​பெற்​றது. இதில் பிரதமர் மோடி பங்​கேற்​றார். பிரேசில் அதிபர் லூலா டா சில்வா மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மோடியை ஆரத்தழுவி வரவேற்றனர். மாநாட்டின் 2-ம் நாளான இன்று சர்​வ​தேச சுற்​றுச்​சூழல், சுகா​தா​ரம் குறித்த சிறப்பு கூட்​டம் நடை​பெறுகிறது. இதி​லும் பிரதமர் மோடி பங்​கேற்​கிறார். பிரிக்ஸ் மாநாட்​டில் சீன அதிபர் ஜி ஜின்​பிங் பங்​கேற்​க​வில்​லை. அவருக்கு பதிலாக, சீன பிரதமர் லி கியாங் பங்​கேற்​றுள்​ளார். ரஷ்ய அதிபர் புதின் காணொலி வாயி​லாக கலந்து கொள்​கிறார். மாநாட்​டில் பல்​வேறு நாடு​களின் தலை​வர்​களு​டன் பிரதமர் மோடி விரி​வான பேச்​சு​வார்த்தை நடத்த உள்​ளார்.

    அமெரிக்காவின் வரி விதிப்பு: உலகின் பல்​வேறு நாடு​கள், குறிப்பாக பிரிக்ஸ் நாடுகள் மீது அமெரிக்க அரசு அதிக வரி​களை விதித்​துள்​ளது. இதுபற்றி பிரிக்ஸ் உச்சி மாநாட்​டில் விரி​வாக விவா​திக்​கப்​பட உள்ளது. பிரிக்ஸ் கூட்​டமைப்பு சார்​பில் புதிய கரன்​சியை அறி​முகம் செய்யவேண்​டும் என்று கடந்த 2023-ல் பிரேசில் அதிபர் யோசனை தெரி​வித்​தார். இதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கண்​டனம் தெரி​வித்​தார். ‘‘புதிய கரன்​சியை அறி​முகம் செய்​தால், பிரிக்ஸ் நாடு​கள் மீது 100 சதவீதம் வரி விதிப்​பேன்’’ என்று எச்​சரி​த்தார். இந்த விவ​காரம் குறித்​தும் பிரிக்ஸ் மாநாட்​டில் விவா​திக்​கப்​படும் என்று தெரி​கிறது.

    பிரிக்ஸ் மாநாட்டை முடித்​துக்​கொண்​டு, பிரேசில் தலைநகர் பிரேசிலி​யா​வுக்கு பிரதமர் மோடி செல்​கிறார். அங்கு அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்​வாவை சந்​திக்​கிறார். இந்த சந்​திப்​பின்​போது பல்​வேறு முக்​கிய ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாக உள்ளன.

    ஆகாஷ் ஏவு​கணை​கள்: பிரேசிலின் பாது​காப்​புக்​காக குறுகிய தூரம் பாயும் ஏவு​கணை​களை வாங்க அந்த நாடு முடிவு செய்​துள்​ளது. இதற்​காக பிரேசில் ராணுவ அதி​காரி​கள் கடந்த 2023-ல் சீனா, இந்​தி​யா​வில் முகாமிட்டு பல்​வேறு ஏவு​கணை​களை ஆய்வு செய்​தனர். வேறு சில நாடு​களின் ஏவு​கணை​களை​யும் பிரேசில் ஆய்வு செய்​தது. இறு​தி​யில், இந்​தி​யா​வின் ஆகாஷ் ஏவு​கணை​களை வாங்க பிரேசில் முடிவு செய்​தது. அதற்​கான ஒப்​பந்​தம் தற்​போது கையெழுத்​தாகும் என்று தெரி​கிறது.

    பிரான்​ஸின் ஸ்கார்​பீன் ரக நீர் ​மூழ்கி கப்​பல்​களை இந்​திய, பிரேசில்கடற்​படைகள் பயன்​படுத்தி வரு​கின்​றன. பிரேசிலிடம் உள்ள இந்த வகை நீர்​மூழ்கி கப்​பல்​களை பராமரிப்​பது தொடர்​பாக​வும் ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதுகுறித்து இந்​தி​யா​வுக்​கான பிரேசில் தூதர் கென்​னத் பெலிக்ஸ் கூறிய​போது, ‘‘டெல்​லி​யில் கடந்த 2023-ல் ஜி-20 உச்சி மாநாடு நடந்​த​போது, பிரதமர் மோடி​யும், பிரேசில் அதிபர் லூலா டா சில்​வா​வும் முக்​கிய பேச்​சு​வார்த்தை நடத்​தினர். இதன்​படி இரு நாட்டு வர்த்தக உறவு வலு​வடைந்து வரு​கிறது. தற்போது, பாதுகாப்பு, வர்த்​தகம்​ தொடர்​பாக பல்​வேறு ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகும்​’’ என்றார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    ‘கோ பேக் டு இந்தியா’, ‘டை நாஜி’: மெல்போர்ன் அப்பா காரை சுத்தம் செய்யும் போது இனவெறிக் குறிப்புகளைக் கண்டார்; இத்தகைய தாக்குதல்களுக்கு எந்த காரணமும் இல்லை – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 10, 2026
    உலகம்

    ‘நீங்கள் மருத்துவத்தில் தோல்வியடைந்தீர்கள், மனிதநேயம்’: எப்ஸ்டீனின் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்த மகளிர் மருத்துவ நிபுணர்களை இந்திய வம்சாவளி மருத்துவர் வெடிக்கிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 9, 2026
    உலகம்

    பரபரப்பான டொராண்டோ மாலுக்கு வெளியே இலக்கு வைக்கப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் கொல்லப்பட்டார், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களைப் பற்றி காவல்துறைக்கு துப்பு இல்லை – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 9, 2026
    உலகம்

    சிங்கப்பூரில் புறாக்களுக்கு உணவளித்த இந்திய வம்சாவளி பெண்ணுக்கு ரூ.2 லட்சம் அபராதம்; அவள் வேலையில்லாதவள், சமூக சேவை செய்வேன் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 9, 2026
    உலகம்

    டோனி ஹாக்கின் திருமணம் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தீவில் நடந்ததா? ஸ்கேட்போர்டிங் லெஜண்ட் பதிலளிக்கிறார் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 8, 2026
    உலகம்

    “இஸ்லாம் இடம்பெயர்வு மீது கட்டமைக்கப்பட்ட மதம்”: NYC மேயர் மம்தானி குடியேற்றத்தைப் பற்றி பேசும் போது நபிகள் நாயகத்தின் ஹிஜ்ரத்தை அழைக்கிறார் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சீன புத்தாண்டு பயண வழிகாட்டி: மந்திரத்தை அனுபவிக்க 5 நகரங்கள்
    • வாரன் பஃபெட்டிடம் நாராயண மூர்த்தி: 5 மில்லியனர்கள் மற்றும் பில்லியனர்கள் பணத்தை எவ்வாறு சேமிக்கிறார்கள் (அது எப்படி உங்களாலும் முடியும்)
    • பூமியில் உள்ள இந்த நகரம் விண்வெளிக்கு மிக அருகில் உள்ளது, அங்கு மக்கள் சுவாசிக்க சிரமப்படுகிறார்கள்: அவர்களின் அன்றாட வாழ்க்கை பற்றி | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நொய்டா மலர் திருவிழா 2026 மலர் காட்சிகள் மற்றும் இலவச நுழைவுடன் மீண்டும் வருகிறது: பார்வையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஷாருக்கான் மன்னத் இன்டீரியர்: ஷாருக்கானின் மன்னத்திலிருந்து கடன் வாங்க 5 ஆடம்பர உள்துறை யோசனைகள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.