விஜய்யை அனைத்து நாயகர்களும் பின்பற்ற வேண்டும் என்று தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்திருக்கிறார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருபவர் தில் ராஜு. விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’ படத்தை தயாரித்தது இவர் தான். சமீபத்தில் அளித்த பேட்டியில் படப்பிடிப்பு நாட்கள் தொடர்பாக விஜய்யை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக தில் ராஜு, “விஜய் சார் படப்பிடிப்பு நாட்களின் எண்ணிக்கையை விதியாகவே நேரடியாக கொடுத்துவிடுகிறார். அவருடைய கொள்கைபடி 6 மாதங்கள், ஒவ்வொரு மாதமும் 20 நாட்கள் படப்பிடிப்புக்கு என்று கொடுக்கிறார். இதனை மற்ற நாயகர்களும் பின்பற்றினால் தயாரிப்பாளர்களுக்கு பொன்னான வாய்ப்பாக இருக்கும். தெலுங்கு திரையுலகில் இப்படியொரு முறை கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.
விஜய் குறித்து தில் ராஜு பேசியிருக்கும் இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. வம்சி இயக்கத்தில் விஜய், சரத்குமார், ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘வாரிசு’.
தில் ராஜு தயாரிப்பில் வெளியான இப்படம் பலரும் தோல்வி என்று தெரிவித்து வந்தார்கள். ஆனால், சமீபத்திய பேட்டியில் ‘வாரிசு’ எனக்கு லாபம் அளித்த படம் என்று தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.