இம்பால்: இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் கடந்த பிப்ரவரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. மாநிலத்தில் அமைதியை மீட்டெடுக்கும் முயற்சிகளில் ஒன்றாக, இனக் குழுக்கள் மறைத்து வைத்துள்ள ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மணிப்பூரில் தெங்னவ்பால், காங்போக்பி, சண்டேல், சுராசந்த்பூர் ஆகிய 4 மலைப்புற மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் போலீஸார் ஒருங்கிணைந்த சோதனை மேற்கொண்டனர். இதில் 200-க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள், 3 கையெறி குண்டு லாஞ்சர்களை கைப்பற்றினர். மேலும் 30 வெடிகுண்டுகள், 10 கையெறி குண்டுகள் உள்ளிட்ட பெருமளவு வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர்.