சென்னை: 71-வது தமிழ்நாடு சீனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் பிரிவில் நேற்று நடைபெற்ற கால் இறுதி ஆட்டங்களில் சென்னை எஸ்டிஏடி 25-16, 25-12, 25-14 என்ற செட் கணக்கில் மினி ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் அணியையும், சென்னை ஐசிஎஃப் 25-11, 25-11, 25-18 என்ற செட் கணக்கில் கிறிஸ்டியன் ஸ்போர்ட்ஸ் ஃபெல்லோஷிப் அணியையும் வீழ்த்தி அரை இறுதி போட்டிக்கு முன்னேறின.
இன்று நடைபெறும் அரை இறுதியில் ஐசிஎஃப் – எஸ்ஆர்எம் ஐஎஸ்டி அணிகளும், சிவந்தி கிளப் – எஸ்டிஏடி அணிகளும் மோதுகின்றன. ஆடவர் பிரிவு கால் இறுதி ஆட்டங்களில் சென்னை ஜிஎஸ்டி 26-24, 26-24, 25-14 என்ற செட் கணக்கில் எஸ்ஆர்எம் அகாடமியையும், வருமானவரித்துறை அணி 25-15, 25-21, 25-20 என்ற செட் கணக்கில் கோவை மேற்கு மண்டல காவல்துறை அணியையும் வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறின.
இன்று நடைபெறும் அரை இறுதி ஆட்டங்களில் ஜிஎஸ்டி – ஐஓபி அணிகளும், எஸ்ஆர்எம் ஐஎஸ்டி – வருமானவரித்துறை அணிகளும் மோதுகின்றன.