Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 6
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»காதர் மொய்தீனுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்
    மாநிலம்

    காதர் மொய்தீனுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்

    adminBy adminJuly 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    காதர் மொய்தீனுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தமிழக அரசின் இந்த ஆண்​டுக்​கான ‘தகை​சால் தமிழர்’ விருதுக்​கு, இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் தலை​வர் கே.எம்​.​காதர் மொய்​தீன் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளார். சுதந்​திர தின விழா​வில் அவருக்கு ரூ.10 லட்​சத்​துக்​கான காசோலை, பாராட்டு சான்​றிதழை முதல்​வர் ஸ்டா​லின் வழங்க உள்​ளார்.

    இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழகத்​துக்​கும், தமிழ் இனத்​தின் வளர்ச்​சிக்​கும் பெரும் பங்​காற்​றிய​வர்​களை பெரு​மைப்​படுத்​தி, கடந்த 2021-ம் ஆண்டு முதல் ‘தகை​சால் தமிழர்’ என்ற விருது வழங்​கப்​படு​கிறது. கடந்த 4 ஆண்​டு​களில் சங்​கரய்​யா, நல்​ல​கண்​ணு, கி.வீரமணி, குமரி அனந்​தன் ஆகியோ​ருக்கு இந்த விருது வழங்​கப்​பட்​டது.

    இந்​நிலை​யில், இந்த ஆண்டு விரு​தாளரை தேர்வு செய்​வதற்​காக அமைக்​கப்​பட்ட குழு​வின் ஆலோ​சனை கூட்​டம் சென்னை தலை​மைச் செயல​கத்​தில் முதல்​வர் ஸ்டா​லின் தலை​மை​யில் நேற்று நடை​பெற்​றது. முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யின் அன்​புக்​குரிய மூத்த அரசி​யல் தலை​வரும், ‘மணிச்​சுடர்’ இதழின் ஆசிரியரும், சமூக நல்​லிணக்​கத்​துக்​காக வாழ்​நாளெல்​லாம் உழைத்து வருபவரு​மான கே.எம்​.​காதர் மொய்​தீனுக்கு விருதை வழங்க இக்​கூட்​டத்​தில் முடிவு செய்​யப்​பட்​டது.

    காதர் மொய்​தீன், இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் கட்​சி​யின் தேசி​யத் தலை​வர் ஆவார். கட்​சி​யின் தமிழ் மாநில தலை​வர், தேசிய பொதுச் செய​லா​ள​ராக​வும் இருந்​தவர். அறி​வார்ந்த சொற்​பொழி​வாளர், மனிதநே​யம், மதநல்​லிணக்​கத்​துக்கு தன்னை அர்ப்​பணித்​துக் கொண்​ட​வர். கோவை​யில் கடந்த 2010-ல் நடந்த உலக தமிழ் செம்​மொழி மாநாட்​டில் தமிழகத்​துக்​கும், அரபகத்​துக்​கும் உள்ள தொடர்​பு​கள் பற்​றிய ஆய்வு கட்​டுரை வழங்​கிய​வர். ‘தா​ருல் குர்​ஆன்’ இதழில்’தமிழர்க்கு இஸ்​லாம் வந்த மதமா? சொந்​த​மா?’ எனும் தலைப்​பில் 8 ஆண்​டு​கள் தொடர் கட்​டுரை எழு​தி​ய​வர். ‘வாழும் நெறி’, ‘குர்​ஆனின் குரல்’, ‘இசுலாமிய இறைக் கோட்​பாடு’ என்​பது உட்பட 6 நூல்​களை எழு​தி​ய​வர்.

    வரலாற்று துறை பேராசிரிய​ர்: திருச்சி ஜமால் முகமது கல்​லூரி​யில் 15 ஆண்​டு​கள் வரலாற்று துறை பேராசிரிய​ராக பணி​யாற்​றிய​வர். காயிதே மில்​லத் காலம் முதல் தொடர்ந்து சமூக நல்​லிணக்​கம் பரப்பி வரும் சிந்​தனை​யாளர். பல நூறு பட்​ட​தா​ரி​களை உரு​வாக்கி அவர்​களது வாழ்வை உயர்த்​திய ஆசானும் ஆவார்.

    ‘தகை​சால் தமிழர்’ விருதுக்கு தேர்வு செய்​யப்​பட்​டுள்ள பேராசிரியர் காதர் மொய்​தீனுக்கு ரூ.10 லட்​சத்​துக்​கான காசோலை, பாராட்டு சான்​றிதழ் ஆகிய​வற்றை ஆகஸ்ட் 15-ம் தேதி நடை​பெறும் சுதந்​திர தின விழா​வில் முதல்​வர் ஸ்டா​லின் வழங்கி கவுரவிக்​கிறார்​.இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அமித் ஷாவின் சென்னை வருகை ரத்து: என்ன காரணம்?

    July 6, 2025
    மாநிலம்

    திமுக ஆட்சி என்றாலே அராஜகம்தான்: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விமர்சனம்

    July 6, 2025
    மாநிலம்

    ரயில் முன்பதிவு பட்டியல் 8 மணி நேரத்துக்கு முன் வெளியீடு

    July 6, 2025
    மாநிலம்

    திருப்புவனம் வழக்கில் தொடர்புபடுத்தி அவதூறு: காவல்நிலையத்தில் பாஜக பெண் நிர்வாகி புகார்

    July 6, 2025
    மாநிலம்

    பெண் போலீஸாரை பாதுகாப்பு பணியில் அதிகம் பயன்படுத்த கூடாது என அறிவுறுத்தப்பட்டது ஏன்? – காவல்துறை விளக்கம்

    July 6, 2025
    மாநிலம்

    பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு: உள்துறை அமைச்சகம் உத்தரவு

    July 6, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அமித் ஷாவின் சென்னை வருகை ரத்து: என்ன காரணம்?
    • சியா விதைகளை இரண்டு வாரங்களுக்கு சாப்பிடுவதன் ஆச்சரியமான நன்மைகளை அமெரிக்க டாக் வெளிப்படுத்துகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நேஷனல் ஹெரால்டு வழக்கு; ஏஜேஎல் நிறுவனத்தை காப்பாற்ற காங். முயற்சி – ராகுல் காந்தியின் வழக்கறிஞர் வாதம்
    • பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் திருத்தியமலை ஏகபுஷ்ப பிரியநாதர் | ஞாயிறு தரிசனம்
    • திமுக ஆட்சி என்றாலே அராஜகம்தான்: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விமர்சனம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.