Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 4
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»தலாய் லாமா தவிர வேறு யாரும் அடுத்த புத்த மதத் தலைவரை தீர்மானிக்க முடியாது: சீனாவுக்கு இந்தியா பதிலடி
    தேசியம்

    தலாய் லாமா தவிர வேறு யாரும் அடுத்த புத்த மதத் தலைவரை தீர்மானிக்க முடியாது: சீனாவுக்கு இந்தியா பதிலடி

    adminBy adminJuly 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தலாய் லாமா தவிர வேறு யாரும் அடுத்த புத்த மதத் தலைவரை தீர்மானிக்க முடியாது: சீனாவுக்கு இந்தியா பதிலடி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: “அடுத்த தலாய் லாமா குறித்த முடிவை எடுக்கும் உரிமை என்பது தற்போதைய புத்த மதத் தலைவரான தலாய் லாமா மற்றும் தலாய் லாமாவின் ‘காடன் போட்ராங் அறக்கட்டளை’ தவிர்த்து வேறு யாருக்கும் இல்லை” என்று சீனாவுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

    இது குறித்து சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “அடுத்த தலாய் லாமா யார் என்பதை முடிவு செய்யும் விவகாரத்தைப் பொறுத்தவரை, அதற்காக நிறுவப்பட்டுள்ள அமைப்பு மற்றும் தலாய் லாமாவின் விருப்பம் ஆகியவற்றின்படியே தீர்மானிக்கப்பட வேண்டும் என்றே தலாய் லாமாவைப் பின்பற்றும் அனைவரும் நினைக்கிறார்கள். தலாய் லாமாவையும், நடைமுறையில் உள்ள மரபுகளையும் தவிர வேறு யாருக்கும் அதைத் தீர்மானிக்கும் உரிமை இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

    தலாய் லாமா அறிவிப்பும், சீனா தலையீடும்: இந்தியாவில் தஞ்சமடைந்து தரம்சாலாவில் வாழ்ந்து வரும் 14-வது தலாய் லாமா தனது 90-வது பிறந்தநாளையொட்டி வெளியிட்ட அறிவிப்பில், 600 ஆண்டுகள் பழமையான தனது அறக்கட்டளை (காடன் போட்ராங் அறக்கட்டளை) தனது மறைவுக்குப் பிறகும் தொடரும் என்றும், உரிய நடைமுறைகளின்படி, திபெத்திய புத்த மதத்தினருக்குத் தலைமை தாங்கும் அடுத்த தலாய் லாமா தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் உறுதி செய்தார்.

    ஆனால், புத்த மதத் தலைவரான தலாய் லாமாவின் ‘வாரிசு’ குறித்து இந்த அறிவிப்பில் சீன அரசு முரண்பட்டுள்ளதுடன், புதிய தலாய் லாமாவை தேர்வு செய்வதில் தலையிடும் முனைப்பில் இருக்கிறது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறும்போது, “தலாய் லாமா உள்ளிட்ட பவுத்த தலைவர்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகளுக்கு சீன அரசின் ஒப்புதலும் அங்கீகாரமும் அவசியம். அதற்கான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

    இந்தப் பின்னணியில்தான், 14-வது தலாய் லாமாவின் ‘வாரிசு’ குறித்த அறிவிப்புக்கு ஆதரவாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரும், பவுத்தருமான கிரண் ரிஜிஜு கருத்து தெரிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

    அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற 14-வது தலாய் லாமாவின் 90-வது பிறந்த தின விழா வரும் 6-ம் தேதி தர்மசாலாவில் நடைபெற உள்ளது. இந்த பிறந்தநாள் நிகழ்வில், மத்திய அரசு சார்பில் கிரண் ரிஜிஜுவும், ராஜீவ் ரஞ்சன் சிங்கும் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    அமர்நாத் யாத்திரை தொடக்கம்

    July 4, 2025
    தேசியம்

    நாடாளுமன்றம் ஜூலை 21-ம் தேதி கூடுகிறது

    July 4, 2025
    தேசியம்

    “மகாராஷ்டிராவில் மராத்தி தான் பேச வேண்டும், இல்லையெனில்…” – மாநில அமைச்சர் எச்சரிக்கை

    July 3, 2025
    தேசியம்

    இமாச்சலப் பிரதேசத்தில் கனமழைக்கு இதுவரை 63 பேர் உயிரிழப்பு – மீட்புப் பணிகள் தீவிரம்

    July 3, 2025
    தேசியம்

    விவசாயிகள் கடனில் மூழ்குகிறார்கள்; அரசு அலட்சியமாக இருக்கிறது: ராகுல் காந்தி

    July 3, 2025
    தேசியம்

    பிஹார் மாநிலத்தில் இளைஞர்களுக்கு உதவித் தொகையுடன் தொழிற்பயிற்சி

    July 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அமர்நாத் யாத்திரை தொடக்கம்
    • “மிரட்டி பணம் பறிப்​பது தான் அவரது வேலை” – நிகிதா மீது பார்​வர்டு பிளாக் தலை​வர் திரு​மாறன்ஜி புகார்
    • நாம் ஏன் இருண்ட வட்டங்களைப் பெறுகிறோம்? பொதுவான காரணங்கள் மற்றும் குறைப்பதற்கான வழிகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அன்புமணி தொடர்பான கேள்விகளை என்னிடம் கேட்க வேண்டாம்: ராமதாஸ் திட்டவட்டம்
    • உங்கள் குழந்தையுடன் வலுவான பிணைப்பை வளர்க்க விரும்புகிறீர்களா? மென்மையான பெற்றோரைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.