சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 3) பவுனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகை வாங்குவோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில் இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதோடு உலக நாடுகளின் வர்த்தக ரீதியான செயல்பாடும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன்படி, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.
அந்தவகையில், சென்னையில், தங்கம் விலை இன்று (வியாழக்கிழமை) கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,105-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.72,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று வெள்ளி விலை ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.120-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 4 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:
03.07.2025 – ஒரு பவுன் ரூ. 72,840
02.07.2025 – ஒரு பவுன் ரூ. 72,520
01.07.2025 – ஒரு பவுன் ரூ. 72,160
30.06.2025- ஒரு பவுன் ரூ. 71,320
இவ்வாறாக கடந்த நான்கு நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,520 அதிகரித்துள்ளது.