சென்னை: நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள், அவற்றின்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொதுநுழைவுத் தேர்வில் (க்யூட்) தேர்ச்சி பெற வேண்டும்.
இந்த ஆண்டில் இளநிலை படிப்புகளுக்கான க்யூட் நுழைவுத் தேர்வு கடந்த மே 13 முதல் ஜூன் 4-ம் தேதி வரை கணினி வழியில் நடத்தப்பட்டது. இந்நிலையில், க்யூட் தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.
இதுபற்றிய கூடுதல் விவரங்களை nta.ac.in என்ற தளத்தில் அறியலாம். ஏதேனும் சந்தேகம் இருந்தால் 011-40759000/ 69227700 என்ற தொலைபேசி எண்கள் அல்லது cuet-ug@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். தேர்வு முடிவுகள் ஜூலை 4ம் தேதி (நாளை) வெளியாகும் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.