Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»“அஜித்குமார் வழக்கில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து நீதியை நிலைநாட்டுக” – விஜய்
    மாநிலம்

    “அஜித்குமார் வழக்கில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து நீதியை நிலைநாட்டுக” – விஜய்

    adminBy adminJuly 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “அஜித்குமார் வழக்கில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து நீதியை நிலைநாட்டுக” – விஜய்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: திருப்புவனம் அஜித்குமார் காவல் மரண வழக்கில் உயர் நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்தி விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அஜித்குமார் காவல் மரண வழக்கில் மக்கள் மனதில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. எந்த அளவிற்குக் கொடூரமாக, மனிதாபிமானம் அறவே அற்று, சாமானியருக்கு அநீதி இழைக்கும் அறமற்ற துறையாக, தமிழக உள்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் காவல் துறை நடந்துகொள்கிறது என்பதை இந்தச் சம்பவம், வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

    தமிழக அரசு, முதலில் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றது. தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் அழுத்தத்திற்குப் பிறகும், உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தலையீட்டிற்குப் பிறகும் தான் காவல் துறை தனது நடவடிக்கைகளைத் தொடங்கியது என்பதை நாடறியும்.

    இந்த ஆட்சியின் போது நடந்த பல்வேறு காவல் மரண வழக்குகளின் தற்போதைய நிலை என்ன, அவ்வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவர் மீதும் கொலை வழக்கு பதியப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியை இந்த அரசு பெற்றுத் தந்துள்ளதா? கடந்த நான்கு ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்திருப்பதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், அந்த 24 பேரின் மரணம் தொடர்பாக, வெள்ளை அறிக்கையைத் தமிழ்நாடு உள்துறை அமைச்சர் உடனடியாக வெளியிட வேண்டும்.

    அஜித்குமார் காவல் மரண வழக்கில் காவல் துறையினரே கொலைக் குற்றவாளிகள் என்பதால், இதனைத் தமிழ்நாடு காவல் துறை விசாரித்தால், விசாரணை நியாயமாக நடைபெறாது. எனவே, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், உயர் நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு, விரைந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அது போலவே இந்த வழக்கிலும் உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து, விரைந்து விசாரணை நடத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும்.

    இத்தகைய கொடூர சம்பவம் இனி ஒருபோதும் நடைபெறாது என்று உள்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் , தமிழ்நாட்டு மக்களுக்கு உடனடியாக உறுதியும் உத்திரவாதமும் அளிக்க வேண்டும். இல்லையேல் பாமர மக்களை வதைக்கும் அதிகார துஷ்பிரயோக மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அராஜக அரசுக்கு வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், தமிழக வரலாற்றில் திமுக நினைத்துக்கூடப் பார்க்க முடியாத தோல்வியை மக்கள் பரிசாக அளிப்பார்கள் என்பதை எச்சரிக்கையாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    போலீஸ் விசாரணையில் அஜித்குமார் உயிரிழந்த சம்பவம்: மானாமதுரை டிஎஸ்பி பணியிடை நீக்கம்

    July 2, 2025
    மாநிலம்

    அஜித்குமார் கொலை வழக்கு: ஜூலை 3-ல் சென்னையில் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்

    July 2, 2025
    மாநிலம்

    தவெக கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கு: ஜூலை 3-ல் தீர்ப்பு

    July 2, 2025
    மாநிலம்

    திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு கூடுதல் இடம் கொடுக்கப்படுமா? – முதல்வர் ஸ்டாலின் பதில்

    July 2, 2025
    மாநிலம்

    அரசே தனது குடிமகனை கொலை செய்துள்ளது: அஜித்குமார் வழக்கில் நீதிமன்றம் கூறியது என்ன?

    July 2, 2025
    மாநிலம்

    கடமை தவறி குற்றம் செய்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை: அஜித்குமாரின் தாயாரிடம் போனில் வருத்தம் தெரிவித்தார் முதல்வர்

    July 2, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • போலீஸ் விசாரணையில் அஜித்குமார் உயிரிழந்த சம்பவம்: மானாமதுரை டிஎஸ்பி பணியிடை நீக்கம்
    • அஜித்குமார் கொலை வழக்கு: ஜூலை 3-ல் சென்னையில் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்
    • தவெக கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கு: ஜூலை 3-ல் தீர்ப்பு
    • திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு கூடுதல் இடம் கொடுக்கப்படுமா? – முதல்வர் ஸ்டாலின் பதில்
    • அரசே தனது குடிமகனை கொலை செய்துள்ளது: அஜித்குமார் வழக்கில் நீதிமன்றம் கூறியது என்ன?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.