உதய் கார்த்திக், சுபிக்ஷா, விவேக் பிரசன்னா, பார்த்திபன் குமார் உள்பட பலர் நடித்த திரைப்படம் ‘ஃபேமிலி படம்’. இதை செல்வகுமார் திருமாறன் இயக்கி இருந்தார். இவர் அடுத்து இயக்கும் படம், ‘டெக்ஸாஸ் டைகர்’.
இதில், கேன்ஸ் பட விழாவில் வெற்றி பெற்ற ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ உள்பட சில படங்களில் நடித்த, ஹிருது ஹாருண் நாயகனாக நடிக்கிறார்.
யுகே ஸ்குவாட் நிறுவனம் சார்பில் சுஜித், பாலாஜி குமார், பாரதி குமார், செல்வகுமார் திருமாறன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. இதன் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.