இந்தி, தெலுங்கு, தமிழ்ப் படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா, அடுத்து நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘மைசா’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் ரவீந்திர புள்ளே இயக்கும் இந்தப் படத்தை அன்ஃபார்முலா பிலிம்ஸ், ‘பான் இந்தியா’ படைப்பாகத் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் முதல் தோற்றத்தைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
படம் பற்றி இயக்குநர் ரவீந்திர புள்ளே கூறும்போது, “இது 2 வருடங்கள் உழைத்து உருவாக்கிய திரைப்படம். இந்தப்படத்தின் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்துள்ளோம். கதை, கதாபாத்திரங்கள், கலை நுணுக்கம் என அனைத்தும் ரசிகர்களைக் கவரும். கோண்ட் பழங்குடியினரின் சுவாரஸியமான உலகத்தை மையமாகக் கொண்ட உணர்ச்சிகரமான ஆக்ஷன் த்ரில்லர் படம் இது” என்றார்.