அயோவா: அமெரிக்காவின் அயோவா நகரில் யுஎஸ் ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற்றது. இதன் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் வளர்ந்து வரும் நட்சத்திர மான இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள கனடாவின் பிரையன் யங்குடன் மோதினார்.
47 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆயுஷ் ஷெட்டி 21-18, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் 16 வயதான தன்வி சர்மா, போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவின் பெய்வென் ஜாங்குடன் மோதினார்.
46 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தன்வி சர்மா 11-21, 21-16, 10-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார்.