Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»இதய சிகிச்சை நிபுணர் இல்லாத காஞ்சிபுரம் தலைமை மருத்துவமனை – 8 பேர் உயிரிழந்த பரிதாபம்
    மாநிலம்

    இதய சிகிச்சை நிபுணர் இல்லாத காஞ்சிபுரம் தலைமை மருத்துவமனை – 8 பேர் உயிரிழந்த பரிதாபம்

    adminBy adminJune 30, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இதய சிகிச்சை நிபுணர் இல்லாத காஞ்சிபுரம் தலைமை மருத்துவமனை – 8 பேர் உயிரிழந்த பரிதாபம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    காஞ்​சிபுரம் அரசு தலைமை மருத்​து​வ​மனை​யில் இதய சிகிச்சை பிரிவுக்​கான மருத்​து​வர்​கள் இல்​லாத​தால் பொது​மக்​கள் அவதி​யுற்று வரு​கின்​றனர். மாரடைப்பு உள்​ளிட்ட நோய்களுக்கு வருபவர்​களுக்கு இதய பிரிவு சிகிச்​சைக்​கான மருத்​து​வர்​கள் இல்​லாத​தால் மற்ற மருத்​து​வர்​கள் சிகிச்சை அளிக்​கும் நிலை இருப்​ப​தாக பொது​மக்​கள் குற்​றம் சாட்டுகின்றனர்.

    காஞ்​சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்​து​வ​மனைக்கு 200-க்​கும் மேற்​பட்ட கிராமங்​களில் இருந்து நாளொன்​றுக்கு சுமார் 1000-க்​கும் மேற்​பட்ட நோயாளி​கள் சிகிச்​சைக்கு வருகின்றனர். இந்த மருத்​து​வ​மனை​யில் டயாலிஸிஸ், கண், காது மற்​றும் மூக்கு தொண்​டை, குழந்​தைகள் மற்​றும் தாய் சேய் நல சிகிச்சை உள்​ளிட்ட பல்​வேறு பிரிவு​கள் இயங்கி வரும் நிலை​யில், இதய சிகிச்சை பிரிவுக்கு கடந்த 100 நாட்​களுக்​கும் மேலாக உரிய மருத்​து​வர்​கள் இல்​லாத நிலை உள்​ளது.

    இதய சம்​பந்​தப்​பட்ட பிரச்​சினைக்கு வரும் நோயாளி​கள், மருத்​து​வர்​கள் இல்​லாத​தால் தனி​யார் மருத்​து​வ​மனைக்கு செல்ல வேண்​டிய நிலை உள்​ளது. இது குறித்து அவசர சிகிச்சை ஊர்தி ஓட்​டுநர்​கள் சிலரிடம் கேட்​ட​போது, இதய சிகிச்சை பிரிவு மருத்​து​வர்​கள் இல்​லாத​தால், சிகிச்​சைக்​காக வந்த 8 பேர் மருத்​து​வ​மனை​யிலும், வெளி​யில் செல்​லும்​போதும் இறந்துள்​ளனர் என்​றனர்.

    ஜூன் 2-வது வாரத்​தில் தண்​டலம் பகு​தியை சேர்ந்த வரத​ராஜன் என்​பவர் வயிற்​றுப்​போக்கு காரண​மாக சிகிச்​சைக்கு வந்​துள்​ளார். அவர் ஏற்​கெனவே இதய நோயால் பாதிக்​கப்​பட்டு ஸ்டென்ட் வைத்​திருந்​தார். அவருக்கு மருத்​து​வ​மனை​யில் திடீரென்று இதய அடைப்பு ஏற்​பட்​டது. மருத்​து​வர்​கள் தீவிர முயற்சி செய்​தும் அவர் உயி​ரிழந்​தார். இதய சிகிச்சை பிரிவு மருத்​து​வர் இருந்​திருந்​தால் அவரை காப்​பாற்றி இருக்​கக் கூடும். இதுகுறித்து காஞ்​சிபுரம் இணை இயக்​குநர் ஹிலாரினி ஜோசிட்டா நளினி​யிடம் கேட்​ட​போது, காஞ்​சிபுரம் அரசு மருத்​து​வ​மனைக்கு இதய சிசிச்சை பிரிவு மருத்​து​வர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். அவர்​கள் விரை​வில் பணி​யில்​ சேரு​வார்​கள்​ என்​றார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    சென்னையில் மின்சாரப் பேருந்துகள் இயக்கம்: வழித்தடங்கள், சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

    July 1, 2025
    மாநிலம்

    சட்டம் ஒழுங்கை பாதுகாத்து நீதியை நிலைநாட்டுங்கள்: காவல் உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

    July 1, 2025
    மாநிலம்

    லாக்கப் மரணங்கள்: காவல் துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் எச்சரிக்கை

    July 1, 2025
    மாநிலம்

    டாஸ்மாக் கடைகளை அரசு நடத்த வேண்டிய அவசியம் என்ன? – ஐகோர்ட் கேள்வி

    July 1, 2025
    மாநிலம்

    பாரதி இல்லத்தை புதுப்பிக்க கோரி எட்டயபுரத்தில் பாஜக நூதன போராட்டம்: 65 பேர் கைது

    July 1, 2025
    மாநிலம்

    சென்னையில் 120 மின்சார பேருந்துகள் சேவை: ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ. வரை இயங்கும்

    July 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மாணவர்கள் தண்ணீர் பருகுவதை ஊக்குவிக்க பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம் அமல்
    • நகங்கள் வெளிப்படுத்தும் 5 நோய்கள்
    • சென்னையில் மின்சாரப் பேருந்துகள் இயக்கம்: வழித்தடங்கள், சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
    • சட்டம் ஒழுங்கை பாதுகாத்து நீதியை நிலைநாட்டுங்கள்: காவல் உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்
    • லாக்கப் மரணங்கள்: காவல் துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் எச்சரிக்கை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.