Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தமிழகத்தில் புதிய மாவட்டங்களை டிசம்பருக்குள் அமைத்து முடியுங்கள்: அன்புமணி
    மாநிலம்

    தமிழகத்தில் புதிய மாவட்டங்களை டிசம்பருக்குள் அமைத்து முடியுங்கள்: அன்புமணி

    adminBy adminJune 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தமிழகத்தில் புதிய மாவட்டங்களை டிசம்பருக்குள் அமைத்து முடியுங்கள்: அன்புமணி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் புதிய மாவட்டங்களை அமைத்து முடிக்க வேண்டும். அதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “2027-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமான வீடுகள் பட்டியல் தயாரிப்பு 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கவுள்ள நிலையில், காவல் நிலையங்கள், வட்டங்கள் தொடங்கி மாவட்டங்கள் வரையிலான எல்லைகளை டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் இறுதி செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளை இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான தலைமைப்பதிவாளர் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.

    அதாவது, புதிய மாவட்டங்கள், வட்டங்களை அமைப்பதாக இருந்தால், நடப்பாண்டிற்குள் செய்து முடிக்க வேண்டும் என்பது தான் அதன் பொருள் ஆகும். 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் புதிய மாவட்டங்களும், வட்டங்களும் அமைக்கப்படவில்லை என்றால், மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் முழுமையான முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்படும் வரை அவற்றை செய்ய முடியாது. அதன்படி, நடப்பு திமுக ஆட்சியில் புதிய மாவட்டங்களை அமைப்பதற்கு இது தான் கடைசி வாய்ப்பு ஆகும்.

    2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது, திமுக ஆட்சிக்கு வந்தால் புதிய மாவட்டங்கள் அமைக்கப்படும் (வாக்குறுதி எண் 380) என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. தேர்தல் பரப்புரையின் போது தஞ்சாவூர் மாவட்டத்தைப் பிரித்து கும்பகோணம் மாவட்டம் அமைக்கப்படும்; திண்டுக்கல் மாவட்டத்தைத் பிரித்து பழனி மாவட்டம் அமைக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் உறுதியளித்திருந்தார்.

    கடலூர், சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் ஆகியும் இதுவரை ஒரே ஒரு புதிய மாவட்டம் கூட ஏற்படுத்தப்படவில்லை.

    தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் 90% வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு, புதிய மாவட்டங்கள் தொடர்பான வாக்குறுதியையும் இன்னும் நிறைவேற்றவில்லை. புதிய மாவட்டங்களை அமைப்பதற்கு செலவுகள் எதுவும் கிடையாது. புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டாலும் கூட, அவை இருக்கும் பணியாளர்களைக் கொண்டு தான் நிரப்பப்படவுள்ளன. ஆனாலும், புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்கு என்ன தடை? என்று தெரியவில்லை.

    பெரிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கான அரசின் சேவைகளை பெற நீண்ட தூரம் அலைய வேண்டியிருக்கிறது. அதற்கு முடிவு கட்ட பெரிய மாநிலங்களைப் பிரித்து புதிய மாவட்டங்களை அமைப்பது மட்டும் தான் தீர்வு. எனவே, சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் புதிய மாவட்டங்களை அமைத்து முடிக்க வேண்டும்; அதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ‘அஜித்குமார் மரணத்துக்கு காரணமானோரை கைது செய்யாதது ஏன்?’ – தமிழக பாஜக சரமாரி கேள்வி

    July 1, 2025
    மாநிலம்

    பூவை ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு!

    June 30, 2025
    மாநிலம்

    செல்லாத பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித் தர கோரி கோவை ஆட்சியர் அலுவலகம் வந்த மூதாட்டி!

    June 30, 2025
    மாநிலம்

    சிறு வணிகர்களுக்கான மின் கட்டண சலுகைகள் என்னென்ன? – தமிழக அரசு அறிவிப்பு

    June 30, 2025
    மாநிலம்

    “தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு அடுத்து விசிக தான் வலுவான கட்சி!” – திருமாவளவன்

    June 30, 2025
    மாநிலம்

    காவலாளி அஜித்குமார் மரணம்: மடப்புரத்தில் குற்றவியல் நடுவர் விசாரணை – நடந்தது என்ன?

    June 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘அஜித்குமார் மரணத்துக்கு காரணமானோரை கைது செய்யாதது ஏன்?’ – தமிழக பாஜக சரமாரி கேள்வி
    • ரயில் கட்டண உயர்வு, தட்கல் டிக்கெட், ஆதார் – பான் இணைப்பு: ஜூலை 1 முதல் வரப்போகும் மாற்றங்கள் என்ன?
    • கூர்மையான மூளை முதல் எடை இழப்பு வரை: சர்க்கரையை விட்டு வெளியேறுவதன் 5 அற்புதமான நன்மைகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பூவை ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு!
    • ஒரு நாய் கடித்த பிறகு என்ன செய்ய வேண்டும்: நீங்கள் பின்பற்றக்கூடிய அத்தியாவசிய உதவிக்குறிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.