Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, June 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»“காவல் நிலையத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவத்துக்காக முதல்வர் பதவி விலக வேண்டும்” – அன்புமணி
    மாநிலம்

    “காவல் நிலையத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவத்துக்காக முதல்வர் பதவி விலக வேண்டும்” – அன்புமணி

    adminBy adminJune 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “காவல் நிலையத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவத்துக்காக முதல்வர் பதவி விலக வேண்டும்” – அன்புமணி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: திருப்புவனம் காவல் நிலையத்தில் இளைஞர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். மனசாட்சி இருந்தால் முதல்வர் விலக வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர் காவலர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. மனித உரிமைகளை சிறிதும் மதிக்காமல் ஸ்டாலின் காவல்துறை இளைஞரை அடித்தே கொலை செய்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

    திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் கிராமத்தில் உள்ள கோயிலுக்கு வந்த மருத்துவர் ஒருவர், அவரது மகிழுந்தில் வைத்திருந்த 10 சவரன் தங்க நகைகளை காணவில்லை என்று அளித்த புகாரின் அடிப்படையில், அவரது மகிழுந்தை நிறுத்துவதற்கு உதவி செய்த கோயிலின் தற்காலிக ஊழியர் அஜித்குமார் என்பவரை காவல்துறையினர் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

    அப்போது அவர்கள் கண்மூடித்தனமாகத் தாக்கியதில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்து விட்டார். அவரது உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அங்குள்ள மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும்? என்பதற்கான விதிகளை உச்சநீதிமன்றம் வகுத்துள்ள நிலையில், அவற்றை மதிக்காத காவல்துறையினர் அஜித்குமாரை கொடூரமாகத் தாக்கி படுகொலை செய்துள்ளனர். தமிழகம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய சாத்தான்குளம் காவல்நிலையப் படுகொலைகள் எவ்வாறு நடந்தனவோ, அதற்கு சற்றும் குறைவில்லாத வகையில் அஜித்குமார் கொல்லப்பட்டுள்ளார். இதற்காக தமிழக காவல்துறையும், அதற்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சரும் தலைகுனிய வேண்டும்.

    தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பதில் படுதோல்வி அடைந்துவிட்ட காவல்துறை அப்பாவிகளை விசாரணைக்கு அழைத்துச் சென்று படுகொலை செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 4 ஆண்டுகளில் 28 பேர் காவல்நிலையங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். இதைவிட கொடுமையான மனித உரிமை மீறல்கள் இருக்க முடியாது.

    சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்ட போது,’’பேய் ஆட்சி செய்தால் பிணந்திண்ணும் சாத்திரங்கள் என்பதை இந்த படுகொலைகள் நினைவுபடுத்துகின்றன. இதற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்.” என்று வலியுறுத்தியிருந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மனசாட்சி இருந்தால், 5 ஆண்டுகளுக்கு வலியுறுத்தியதைப் போல இப்போது பதவி விலக வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அன்புமணி திடீர் டெல்லி பயணம்

    June 30, 2025
    மாநிலம்

    ராமதாஸ் உடனான சந்திப்பில் திமுகவின் சூழ்ச்சி இல்லை: அன்புமணிக்கு செல்வப்பெருந்தகை பதில்

    June 30, 2025
    மாநிலம்

    தனது வாழ்நாளில் பொது வாழ்க்கைக்காக 80 ஆண்டுகளை ஒப்படைத்தவர் கருணாநிதி: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

    June 30, 2025
    மாநிலம்

    நகை திருட்டு விசாரணையின்போது மடப்புரம் கோயில் காவலாளி உயிரிழப்பு: தலைவர்கள் கண்டனம்

    June 30, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் ஜூலை 6-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு

    June 30, 2025
    மாநிலம்

    காவல் நிலைய மரணங்களுக்கு போலி கண்ணீர் தாண்டி முதல்வரின் பதில் என்ன? – டிடிவி தினகரன்

    June 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அன்புமணி திடீர் டெல்லி பயணம்
    • எலும்புகளை வலிமையாக்க உடலுக்கு தேவையான 5 ஊட்டச்சத்துக்கள்
    • ராமதாஸ் உடனான சந்திப்பில் திமுகவின் சூழ்ச்சி இல்லை: அன்புமணிக்கு செல்வப்பெருந்தகை பதில்
    • தனது வாழ்நாளில் பொது வாழ்க்கைக்காக 80 ஆண்டுகளை ஒப்படைத்தவர் கருணாநிதி: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
    • நகை திருட்டு விசாரணையின்போது மடப்புரம் கோயில் காவலாளி உயிரிழப்பு: தலைவர்கள் கண்டனம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.