Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, June 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»திருப்புவனம் காவல் நிலையத்தில் கோயில் காவலாளி மரணம்: திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்
    மாநிலம்

    திருப்புவனம் காவல் நிலையத்தில் கோயில் காவலாளி மரணம்: திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

    adminBy adminJune 29, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    திருப்புவனம் காவல் நிலையத்தில் கோயில் காவலாளி மரணம்: திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: திருப்புவனம் காவல் நிலையத்தில் கோயில் காவலாளி அஜித் குமார் மரணம் அடைந்தது குறித்து முழு உண்மையை வெளி கொண்டுவர உடனடியாக மாவட்ட நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் என்பவர் பெண் பக்தரின் காரில் இருந்த ஒன்பதரை பவுன் நகையை திருடி விட்டதாக வந்த புகாரை அடுத்து, திருப்புவனம் காவல்துறை அஜித் குமாரை கைது செய்து விசாரணை செய்ததாகவும், அச்சமயத்தில் காவலரின் தாக்குதலால் அஜித் குமார் மரணம் அடைந்து விட்டதாகவும் அவரின் உறவினர்கள் இறந்த அஜித் குமாரின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    “ஜெய்பீம் படம் பார்த்தேன். உள்ளம் உலுக்கியது” என சினிமா ரிவீவ் எழுதிய திமுக அரசின் முதலமைச்சர் எங்கே இருக்கிறார்?. விக்னேஷ் லாக்கப் மரணத்தின் போது, சட்டப்பேரவையிலேயே பச்சைப்பொய் பேசியவர் தானே நீங்கள்? இதற்கும் அதே போல் பொய் தான் பதிலாக வருமா?

    தவறு செய்ததாக காவல்துறை கருதினால், கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து, உரிய சட்ட நெறிமுறையை பின்பற்ற வேண்டுமே தவிர, சட்டத்தை தங்கள் கைகளில் முழுமையாக காவல்துறை எடுத்துக்கொள்ள கூடாது. தன்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையைக் கூட நிர்வகிக்கத் தெரியாத பொம்மை முதல்வருக்கு எனது கடும் கண்டனம்.

    திருப்புவனம் காவல் நிலையத்தில் திருக்கோவில் காவலாளி அஜித் குமார் மரணம் அடைந்த நிகழ்வு குறித்து முழு உண்மையை வெளி கொண்டுவர உடனடியாக மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைத்து, முழு விசாரணை நடத்தி, இந்த மரணத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், மேலும் இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க திமுக ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன்’ என்றார்



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அன்புமணி திடீர் டெல்லி பயணம்

    June 30, 2025
    மாநிலம்

    ராமதாஸ் உடனான சந்திப்பில் திமுகவின் சூழ்ச்சி இல்லை: அன்புமணிக்கு செல்வப்பெருந்தகை பதில்

    June 30, 2025
    மாநிலம்

    தனது வாழ்நாளில் பொது வாழ்க்கைக்காக 80 ஆண்டுகளை ஒப்படைத்தவர் கருணாநிதி: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

    June 30, 2025
    மாநிலம்

    நகை திருட்டு விசாரணையின்போது மடப்புரம் கோயில் காவலாளி உயிரிழப்பு: தலைவர்கள் கண்டனம்

    June 30, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் ஜூலை 6-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு

    June 30, 2025
    மாநிலம்

    காவல் நிலைய மரணங்களுக்கு போலி கண்ணீர் தாண்டி முதல்வரின் பதில் என்ன? – டிடிவி தினகரன்

    June 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அன்புமணி திடீர் டெல்லி பயணம்
    • எலும்புகளை வலிமையாக்க உடலுக்கு தேவையான 5 ஊட்டச்சத்துக்கள்
    • ராமதாஸ் உடனான சந்திப்பில் திமுகவின் சூழ்ச்சி இல்லை: அன்புமணிக்கு செல்வப்பெருந்தகை பதில்
    • தனது வாழ்நாளில் பொது வாழ்க்கைக்காக 80 ஆண்டுகளை ஒப்படைத்தவர் கருணாநிதி: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
    • நகை திருட்டு விசாரணையின்போது மடப்புரம் கோயில் காவலாளி உயிரிழப்பு: தலைவர்கள் கண்டனம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.