Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»“உங்கள் தலைமையால் இந்தியாவின் கனவுகள் நனவாகி வருகின்றன” – பிரதமர் மோடியுடன் சுக்லா பேசியது என்ன?
    தேசியம்

    “உங்கள் தலைமையால் இந்தியாவின் கனவுகள் நனவாகி வருகின்றன” – பிரதமர் மோடியுடன் சுக்லா பேசியது என்ன?

    adminBy adminJune 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “உங்கள் தலைமையால் இந்தியாவின் கனவுகள் நனவாகி வருகின்றன” – பிரதமர் மோடியுடன் சுக்லா பேசியது என்ன?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார்.

    கடந்த 25-ம் தேதி அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா சென்றார். அங்கு அவர் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில், பிரதமர் மோடிநேற்று அவருடன் செயற்கைக்கோள் தொலை தொடர்பு வசதி மூலம் கலந்துரையாடினார். இருவரும் 18 நிமிடங்கள், 25 விநாடிகள் பேசினர். பிரதமர் மோடி – ஷுபன்ஷுசுக்லா இடையே நடைபெற்ற உரையாடல் விவரம்:

    பிரதமர் மோடி: தாய் பூமியில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறீர்கள். ஆனால் உங்கள் இதயம், இந்தியர்களோடு மிக நெருக்கமாக இருக்கிறது. விண்வெளி நிலையத்தில் இந்திய தேசியக் கொடியை நிறுவியதற்காக 140 கோடி இந்தியர்களின் சார்பில் வாழ்த்துகளை கூறுகிறேன். அங்கு எல்லாம் நன்றாக இருக்கிறதா, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?

    ஷுபன்ஷு சுக்லா: உங்களுக்கும் 140 கோடி இந்திய மக்களுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். விண்வெளி நிலையத்தில் தங்கிஇருப்பது புதுவித அனுபவமாக இருக்கிறது. இது எனது தனிப்பட்ட பயணம் அல்ல. ஒட்டுமொத்த இந்தியாவின் பயணம். உங்களது சீரிய தலைமையால் இந்தியாவின் கனவுகள் நனவாகி வருகின்றன.

    பிரதமர்: பூமியில் இருந்து கேரட் அல்வா கொண்டு சென்றீர்கள். சக வீரர்கள் அல்வா குறித்து என்ன கூறினார்கள்?

    சுக்லா: கேரட் அல்வா, பாசிப் பருப்பு அல்வா, மாம்பழச் சாறு ஆகியவற்றை விண்வெளி நிலையத்துக்கு எடுத்து வந்தேன். இவற்றை சகவீரர்கள் அனைவரும் ருசித்து சாப்பிட்டனர். மிகவும் சுவையாக இருந்ததாக அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    பிரதமர்: விண்வெளி நிலையத்தில் இருந்தபடி பூமியை சுற்றி வருகிறீர்கள். நீங்கள் தற்போது எந்த இடத்தில் இருக்கிறீர்கள்?

    சுக்லா: ஒரு நாளில் 16 முறை சூரிய உதயத்தையும், 16 முறை சூரிய அஸ்தமனத்தையும் பார்க்கிறேன். மணிக்கு 28,000 கி.மீ. வேகத்தில் பூமியை சுற்றி வருகிறோம்.

    பிரதமர்: விண்வெளி நிலையத்தில் இருந்து அண்டவெளியை பார்க்கும்போது என்ன தோன்றுகிறது?

    சுக்லா: விண்வெளி நிலையத்தில் இருந்து முதலில் பூமியை பார்த்தேன். மேலே இருந்து பார்க்கும்போது பூமிக்கு எந்த எல்லைக்கோடும் இல்லை. இந்தியாவை பார்க்கும்போது அழகாக, அற்புதமாக, மிகவும் பெரிதாக இருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற தாரக மந்திரத்தை பூமி பிரதிபலிக்கிறது. நாம் பூமியை சேர்ந்தவர்கள். நாம் அனைவரும் ஒன்று என்பதை உணர்கிறேன்.

    பிரதமர்: விண்வெளி நிலைய சூழல் எப்படி இருக்கிறது?

    சுக்லா: புதிய அனுபவமாக இருக்கிறது. இங்கு ஈர்ப்பு விசை கிடையாது. உங்களோடு பேசும்போதுகூட கால்களை கட்டி வைத்து உள்ளேன். விண்வெளி நிலையத்தில் இருப்பது பறப்பதை போன்ற அனுபவமாக இருக்கிறது. தூங்குவது மட்டும் பெரும் சவாலாக இருக்கிறது. புவிசுற்றுவட்ட பாதையில் சுற்றும்போது இந்தியாவை பார்க்கிறேன். வரைபடத்தில் பார்ப்பதைவிட இங்கிருந்து பார்க்கும்போது இந்தியா மிகவும் பிரம்மாண்டமாக இருக்கிறது.

    பிரதமர்: தியானம் பயனுள்ளதாக இருக்கிறதா?

    சுக்லா: பூமியில் இருந்து விண்கலத்தில் புறப்பட்டபோதே தியானத்தை கடைபிடிக்க தொடங்கிவிட்டேன். இதன்மூலம் எனது மனதையும், உடலையும் ஒருமுகப்படுத்த முடிகிறது. சவாலான நேரங்களில் தியானம் பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது. விண்வெளி நிலையத்தை வந்தடைந்தது இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதுகிறேன். நமது நாட்டின் குழந்தைகளுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது. வானத்தின் எல்லைகளை தாண்டி உள்ளோம். எனக்கு பின்புறத்தில் இந்திய தேசியக் கொடி இருக்கிறது. இதை நேற்றுதான் நிறுவினேன். இது மிகவும் உணர்வுபூர்வமாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். இதுதொடர்பான புகைப்படம், வீடியோவை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ‘விண்வெளியில் இருந்து இந்தியாவை பார்க்கும்போது…’ – பிரதமர் மோடியுடன் சுக்லா பேசியது என்ன?

    June 29, 2025
    தேசியம்

    இந்தியாவுக்கு பணம் அனுப்புவதற்கான கட்டணத்தை 1% ஆக குறைக்க அமெரிக்கா முடிவு

    June 29, 2025
    தேசியம்

    ஐஎஸ் தீவிரவாதி சாகிப் நாச்சன் டெல்லி மருத்துவமனையில் உயிரிழப்பு

    June 29, 2025
    தேசியம்

    அயோத்தி ராமர் கோயிலில் விரைவில் டைட்டானியம் ஜன்னல் கிரில்கள்

    June 29, 2025
    தேசியம்

    செல்போன் மூலம் அவசரகால எச்சரிக்கை: தொலை தொடர்பு துறை பரிசோதனை

    June 29, 2025
    தேசியம்

    ரா தலைவராக பராக் ஜெயின் நியமனம்

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது
    • ஜப்பானின் நீண்ட ஆயுள் என்று அழைக்கப்படும் ஓகிமியிடமிருந்து கற்றுக்கொள்ள வாழ்க்கை மாறும் பாடங்கள்
    • ‘பெரிய தவறு’: ‘பெரிய அழகான’ வரி மசோதாவை நிராகரித்ததற்காக டிரம்ப் செனட்டர் டில்லிஸைப் பின் தொடர்கிறார் | உலக செய்திகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அனல் அரசு மூலம் என் மகன் அறிமுகமாவது பாக்கியம்: விஜய் சேதுபதி மகிழ்ச்சி
    • தாயின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி வீசிய மகன்கள் – அடக்கம் செய்ய நிதி வசதி இல்லாததால் பரிதாபம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.