ஓடிடியில் ஜூலை 4-ம் தேதி ‘மெட்ராஸ் மேட்னி’ படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகேயன் மணி இயக்கத்தில் காளி வெங்கட், ரோஷிணி, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மெட்ராஸ் மேட்னி’. இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்க, மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் பலரும், இப்படத்தைப் பார்த்து பாராட்டு தெரிவித்தார்கள். தற்போது இதன் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் ப்ரைம் வீடியோ மற்றும் டென்ட்கொட்டா ஆகிய ஓடிடி தளங்களில் ஜூலை 4-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திரையரங்குகளில் பெற்ற வரவேற்பை விட, ஓடிடி தளத்தில் மேலும் வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு.