Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, June 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»விளையாட்டு»இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடும் வங்கதேசம்
    விளையாட்டு

    இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடும் வங்கதேசம்

    adminBy adminJune 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடும் வங்கதேசம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கொழும்பு: இலங்​கைக்கு எதி​ரான 2-வது கிரிக்​கெட் டெஸ்ட் போட்​டி​யில் இன்​னிங்ஸ் தோல்​வியைத் தவிர்க்க வங்​கதேச அணி போராடி வரு​கிறது.

    இலங்கை – வங்​கதேச அணி​களுக்கு இடையி​லான கடைசி மற்​றும் 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி கொழும்பு நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் முதலில் விளை​யாடிய வங்​கதேசம் 79.3 ஓவர்​களில் 247 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. இதையடுத்து முதல் இன்​னிங்ஸை விளை​யாடிய இலங்கை அணி, 2-ம் நாள் ஆட்ட நேர இறு​தி​யில் 2 விக்​கெட் இழப்​புக்கு 290 ரன்​கள் எடுத்​திருந்​தது.

    இந்​நிலை​யில் நேற்று 3-ம் நாள் ஆட்​டத்தை பதும் நிசங்கா 146 ரன்​களு​ட​னும், பிர​பாத் ஜெயசூர்யா 5 ரன்​களு​ட​னும் தொடங்கினர். பதும் நிசங்கா 158 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஆட்​ட​மிழந்​தார். பிர​பாத் ஜெயசூர்யா 10 ரன்​களும், தனஞ்​செய டி சில்வா 7 ரன்​களும், கமிந்து மெண்​டிஸ் 33 ரன்​களும் எடுத்து வீழ்ந்​தனர்.

    ஆனால் குசல் மெண்​டிஸ் அதிரடி​யாக விளை​யாடி 87 பந்​துகளில் 84 ரன்​கள் குவித்​தார். 116.5 ஓவர்​களில் 458 ரன்​களுக்கு இலங்கை அணி ஆட்​ட​மிழந்​தது. தைஜுல் இஸ்​லாம் 5, நயீம் ஹசன் 3, நஹித் ராணா ஒரு விக்​கெட் வீழ்த்​தினர்.

    இதையடுத்து 211 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை வங்​கதேச அணி தொடர்ந்து விளை​யாடியது. ஆனால், இலங்கை வீரர்​களின் சிறப்​பான பந்​து​வீச்​சால் அந்த அணி 3-ம் நாள் ஆட்ட நேர இறு​தி​யில் 6 விக்​கெட் இழப்​புக்கு 115 ரன்​கள் எடுத்து தடு​மாறி வரு​கிறது.

    ஷத்​மான் இஸ்​லாம் 12, அனா​முல் ஹக் 19, மோமினுல் ஹக் 15, நஜில் ஹொசைன் ஷன்டோ 19, முஷ்பிகுர் ரஹிம் 26, மெஹதி ஹசன் மிராஸ் 11 ரன்​கள் எடுத்து வீழ்ந்​தனர். லிட்​டன் தாஸ் 13 ரன்​களு​டன் ஆட்​ட​மிழக்​காமல் உள்ளார். தற்​போது 96 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் இன்​னிங்ஸ் தோல்​வியைத் தவிர்க்க வங்​கதேச அணி போராடி வரு​கிறது.

    இலங்கை தரப்​பில் தனஞ்​செய டி சில்​வா, பிர​பாத் ஜெயசூர்ய ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர். தரிந்து ரத்​னாயக, அசிதா பெர்​னாண்டோ ஆகியோர் தலா ஒரு விக்​கெட்​டைக் கைப்​பற்​றினர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    விளையாட்டு

    முதல் டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சு சொதப்பியது எப்படி? – பிரசித் கிருஷ்ணா ஓபடன் டாக்

    June 28, 2025
    விளையாட்டு

    ஹேசில்வுட் அபார பவுலிங்: மே.இ.தீவுகளை ஊதித்தள்ளி ஆஸி. வெற்றி!

    June 28, 2025
    விளையாட்டு

    இந்​திய தடகள வீராங்​கனை சஸ்​பெண்ட்

    June 28, 2025
    விளையாட்டு

    நெல்லை ராயல்ஸ் கிங்ஸை வீழ்த்திய திண்டுக்கல் டிராகன்ஸ்!

    June 28, 2025
    விளையாட்டு

    மேற்கு இந்திய தீவு​கள் வீரருக்கு அபராதம்

    June 28, 2025
    விளையாட்டு

    உஸ்பெகிஸ்தான் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்!

    June 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ”ஜூலை 1 முதல் 3.16% கட்டணம் உயர்த்த மின்வாரியம்  முடிவு” – அன்புமணி குற்றச்சாட்டு
    • 5 ஸ்டைல் ​​பாடங்கள் சோஹ்ரான் மம்தானியிடமிருந்து நாம் முற்றிலும் திருடலாம் – இந்தியாவின் டைம்ஸ்
    • திருச்சி மாநகராட்சியில் மக்கள் பிரச்சினைகள் – திமுக அரசை கண்டித்து ஜூலை 3ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
    • வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடுவது நீரிழிவு அபாயத்தை அதிகரிக்க முடியுமா? டாக்டர் வினைபுரியும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஒரு புலி, 4 குட்டிகளை விஷம் வைத்து கொன்றதாக கர்நாடகாவில் 3 பேர் கைது

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.