தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 4 நாட்களில் பவுனுக்கு ரூ.2 ஆயிரம் குறைந்துள்ளது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை ஏற்றத்தாழ்வுடன் இருந்து வருகிறது. குறிப்பாக கடந்த 14-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.74,560-க்கு உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது.
இதைத்தொடர்ந்து விலை சற்று ஏற்ற இறக்கமாக இருந்த நிலையில், கடந்த 23-ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. அதன்படி, நேற்று பவுனுக்கு ரூ.680 குறைந்து, ரூ.71,880-க்கும், கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.8,985-க்கும் விற்பனையானது. 24 காரட் சுத்த தங்கம் ரூ.78,408-க்கு விற்பனையானது.
கடந்த 22-ம் தேதி பவுன் ரூ.73,880-க்கு விற்கப்பட்ட நிலையில், நேற்று ரூ.71,880-ஆகக் குறைந்துள்ளது. அந்த வகையில் 4 நாட்களில் ரூ.2 ஆயிரம் விலை குறைந்துள்ளது. இது நகை வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.