Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, June 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»‘ஃபீனிக்ஸ்’ ட்ரெய்லர் எப்படி? – சூர்யா சேதுபதியின் ஆக்‌ஷன் அறிமுகம்!
    சினிமா

    ‘ஃபீனிக்ஸ்’ ட்ரெய்லர் எப்படி? – சூர்யா சேதுபதியின் ஆக்‌ஷன் அறிமுகம்!

    adminBy adminJune 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘ஃபீனிக்ஸ்’ ட்ரெய்லர் எப்படி? – சூர்யா சேதுபதியின் ஆக்‌ஷன் அறிமுகம்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஹீரோவாக அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

    விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரவுடி தான்’, ‘சிந்துபாத்’ படங்களில் அவரது மகன் சூர்யா சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். தற்போது அவர் ‘ஃபீனிக்ஸ்’ என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை பிரபல ஸ்டன்ட் இயக்குநர் அனல் அரசு இயக்குகிறார். ஆக்‌ஷன் – ஸ்போர்ட்ஸ் ட்ராமாவாக உருவாகும் இப்படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். இந்தப் படம் கடந்த நவம்பர் 14-ம் தேதியே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. வரும் ஜூலை 4 ரிலீஸ் ஆகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    ட்ரெய்லர் எப்படி? – ட்ரெய்லரின் கலர் டோன், இது எப்படியான படம் என்பதை கூறிவிடுகிறது. படு சீரியஸாக செல்லும் ட்ரெய்லர் முழுக்கவே அதிரடி, ஆக்‌ஷன், ரத்தம், வன்முறை தெறிக்கிறது. சூர்யா சேதுபதி படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளுக்காக உண்மையிலேயே நிறைய மெனக்கெட்டிருப்பார் என்பதை உணர முடிகிறது. சாம் சி.எஸ் பின்னணி இசை ட்ரெய்லருக்கு விறுவிறுப்பை கூட்டுகிறது. வேல்ராஜின் ஒளிப்பதிவின் தரம் பளிச்சென தெரிகிறது. அத்துடன் படத்தில் வரலட்சுமி, சம்பத், தேவதர்ஷினி, ஆடுகளம் நரேன் என பிரபல நடிகர் பட்டாளமும் உள்ளது. ட்ரெய்லரில் இருக்கும் விறுவிறுப்பு படத்திலும் இருந்தால் வெற்றி நிச்சயம்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    கவுதம் ராம் கார்த்திக்கின் புதிய படம் அறிவிப்பு!

    June 28, 2025
    சினிமா

    தீபாவளிக்கு வெளி​யாகிறது லெஜெண்ட் சரவணன் படம்

    June 28, 2025
    சினிமா

    ‘பாம்’ கற்​பனை உலகத்​தில் நடக்​கும் கதை: இயக்குநர் விஷால் வெங்கட் பகிர்வு

    June 28, 2025
    சினிமா

    பாலு மகேந்திராவின் ‘வீடு’ போல 3 பிஹெச்கே படம் அமையும்: ரவி மோகன் கணிப்பு

    June 28, 2025
    சினிமா

    இந்தி ‘பிக்பாஸ்’ புகழ் நடிகை ஷெஃபாலி மரணம்: மாரடைப்பு காரணமா?

    June 28, 2025
    சினிமா

    ஆஸ்கர் விருதுக் குழுவில் இணைய அழைப்பு: கமலுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

    June 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஜூலை 18 முதல் ஆக.15 வரை ஒரு நாள் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா – முன்பதிவு தொடக்கம்
    • கவுதம் ராம் கார்த்திக்கின் புதிய படம் அறிவிப்பு!
    • மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் 26,000 கன அடியாக அதிகரிப்பு
    • டயட் சோடா குடிக்கிறீர்களா? இது எடை இழப்பை நாசப்படுத்துவது எப்படி | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அந்தமான் நிக்கோபரில் 4.6 ரிக்டரில் நிலநடுக்கம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.