Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»அண்ணா பெயரை அதிமுக அடமானம் வைத்துவிட்டது: முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
    மாநிலம்

    அண்ணா பெயரை அதிமுக அடமானம் வைத்துவிட்டது: முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

    adminBy adminJune 27, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அண்ணா பெயரை அதிமுக அடமானம் வைத்துவிட்டது: முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருப்பத்தூர்: அண்​ணா, கருணாநிதி போன்ற தலை​வர்​களை கொச்​சைப்​படுத்தி வீடியோ போடு​கிறார்​கள், அதை அதி​முக​வினர் வேடிக்​கைப் பார்க்​கிறார்​கள். அண்ணா பெயரை அதி​முக அடமானம் வைத்​து​விட்​டது என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கூறி​னார்.

    திருப்​பத்​தூர் மாவட்​டம் ஜோலார்​பேட்டை அடுத்த மண்​டல​வாடி பகு​தி​யில் நேற்று நடைபெற்ற அரசு விழா​வில் முடிவுற்ற பணி​களை திறந்​து​வைத்​தும், புதிய திட்​டப் பணி​களுக்கு அடிக்​கல் நாட்​டி​யும், பயனாளி​களுக்கு அரசு நலத்​திட்ட உதவி​களை வங்​கி​யும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பேசி​ய​தாவது: மக்​கள் நலனில் அக்​கறை இல்​லாத கடந்த ஆட்​சி​யாளர்​களால் சீரழிந்த தமிழகத்​தின் வளர்ச்​சியை திரா​விட மாடல் அரசு கடந்த 4 ஆண்​டு​களில் மீட்​டெடுத்​துள்​ளது. தமிழகத்​துக்கு ஓரவஞ்​சனை செய்​யும் மத்​திய அரசால்​கூட நமது வளர்ச்​சியை மறைக்க முடிய​வில்​லை.

    தமிழகம் 9.69 சதவீத வளர்ச்​சி​யுடன், மற்ற மாநிலங்​களை​விட பொருளா​தா​ரத்​தில் புதிய உச்​சத்தை அடைந்​திருப்​ப​தாக மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது. திருப்​பத்​தூர் மாவட்​டத்​தில் ரூ.182 கோடி மதிப்​பில் குடிநீர் திட்​டம் செயல்​படுத்​தப்​பட்​டுள்​ளது. ரூ.425 கோடி​யில் சாலைகள் மேம்​படுத்​தப்​பட்​டு, 14 பாலங்​கள் கட்​டப்​பட்​டுள்​ளன.

    இன்​னும் 5 மாதங்​களுக்​குள் தமிழ்​நாடு முழு​வதும் 5 லட்​சம் வீட்​டுமனை பட்​டாக்​கள் வழங்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டது. இதை தாண்டி கடந்த டிசம்​பரில் இருந்து தற்​போது வரை 6.92 லட்​சம் பட்​டாக்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன. மத்​திய அரசின் வீடு கட்​டும் திட்​ட​மான பிரதம மந்​திரி ஊரக குடி​யிருப்பு திட்​டத்​தில் ஒரு வீடு கட்ட ரூ.1.20 லட்​சம் ஒதுக்​கப்​படு​கிறது. இதில் 60 சதவீதம் நிதியை மத்​திய அரசும், 40 சதவீதம் நிதியை மாநில அரசும் தரு​கின்​றன.

    மாநில அரசு நிதி வழங்​கி​யும், அதை மத்​திய அரசு திட்​டம் என்​கின்​றனர். பாஜக​வும், அதி​முக​வும் மக்களைப் பற்​றிக் கவலைப்​ப​டா​மல், மதத்​துக்​காக கவலைப்​படு​கிறார்​கள். கடந்த 4 ஆண்​டு​களில் 3 ஆயிரம் கோயில்​களுக்கு குட​முழுக்கு நடத்​தப்​பட்​டுள்​ளது. அண்​ணா, கருணாநிதி போன்ற தலை​வர்​களைக் கொச்​சைப்​படுத்தி வீடியோ போடு​கிறார்​கள். அதை அண்ணா பெயரில் கட்சி நடத்​துபவர்​கள் (அதி​முக) வேடிக்​கைப் பார்க்​கிறார்​கள்.

    அண்ணா பெயரையே அவர்​கள் அடமானம் வைத்​து​விட்​டார்​கள். தற்​போது கட்​சியை அடமானம் வைத்​தவர்​கள், நாளை தமிழகத்தை அடமானம் வைக்க அனு​ம​திக்​கக் கூடாது. இவ்​வாறு முதல்​வர் பேசி​னார். இதில், அமைச்​சர்​கள் துரை​முரு​கன், எ.வ.வேலு, ஆர்​.​காந்​தி, எம்​.பி.க்​கள் சி.என்​.அண்​ணாதுரை, கதிர்​ஆனந்த், எம்​எல்​ஏக்​கள் நல்​லதம்​பி, தேவ​ராஜ்,​வில்​வ​நாதன், மாவட்ட ஆட்​சி​யர் சிவசெளந்​திர​வல்லி உள்​ளிட்​டோர் கலந்​துகொண்​டனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    இலங்கை கடற்படையினரால் 8 மீனவர்கள் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

    June 29, 2025
    மாநிலம்

    திமுக ஆட்சி கால காவல்நிலைய மரணங்களுக்கு மட்டும் ஸ்டாலின் மவுனம் காப்பது ஏன்? – தவெக

    June 29, 2025
    மாநிலம்

    ‘தமிழகத்தில் 2026-ல் கூட்டணி ஆட்சிதான் அமையும்’ – விஜய பிரபாகரன் கணிப்பு

    June 29, 2025
    மாநிலம்

    திருப்புவனம் காவல் நிலையத்தில் கோயில் காவலாளி மரணம்: திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

    June 29, 2025
    மாநிலம்

    திருச்சி விமான நிலையத்துக்கு அதிகாலையில் வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

    June 29, 2025
    மாநிலம்

    கலாநிதி – தயாநிதி விவகாரம்: சன் குடும்ப மோதல்… கலைஞர் இல்லாத குறையை தீர்ப்பாரா ஸ்டாலின்?

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘சூர்யா 46’ கதைக்களம் என்ன? – இயக்குநர் வெங்கி அட்லுரி வெளிப்படை
    • இலங்கை கடற்படையினரால் 8 மீனவர்கள் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
    • 7 விளையாட்டு மாற்றும் ரகசியங்கள் செல்வம் மற்றும் மகிழ்ச்சிக்காக ஆழ் மனதை மாற்றியமைக்க
    • பழநி கோயிலில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம்: அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்
    • ‘சித்தாரே ஜமீன் பர்’ படத்துக்காக சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்டேன் – ஆமிர்கான்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.