Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»“மனநிறைவு இல்லை என்றாலும் மக்களுக்காக கூட்டணியில் தொடர்கிறோம்!” – தடதடக்கும் தவாக தலைவர் வேல்முருகன் நேர்காணல்
    மாநிலம்

    “மனநிறைவு இல்லை என்றாலும் மக்களுக்காக கூட்டணியில் தொடர்கிறோம்!” – தடதடக்கும் தவாக தலைவர் வேல்முருகன் நேர்காணல்

    adminBy adminJune 23, 2025No Comments5 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “மனநிறைவு இல்லை என்றாலும் மக்களுக்காக கூட்டணியில் தொடர்கிறோம்!” – தடதடக்கும் தவாக தலைவர் வேல்முருகன் நேர்காணல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தவெக தலைவர் நடிகர் விஜய் மாணவிகளுடன் நெருக்கமாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்ட விவகாரத்தில் தவெக-வினருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகனுக்கும் இடையில் வெடித்த மோதல் இன்னும் நின்றபாடில்லை. மேடை கண்ட இடமெங்கும் தவெக-வினருக்கு எதிராக தகித்துக் கொண்டிருக்கிறார் வேல்முருகன். பதிலுக்கு தவெக தம்பிகளும் சமூகவலைதளங்களில் அவரை தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், ‘இந்து தமிழ் திசை’க்காக வேல்முருகனிடம் பேசினோம்.

    உங்களுடைய தாய்க் கட்சியான பாமக-வில் நடக்கும் தந்தை – மகன் மோதலுக்கு உண்மையான காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்?

    உண்​மை​யான காரணம் உங்​களுக்​கோ, எனக்​கோ, யாருக்​கும் தெரிய வாய்ப்​பில்​லை. அது அப்​பா, மகன் இரு​வ​ருக்கு மட்​டுமே தெரிந்த விட​யம்.

    பாமக-வில் இப்போது நடந்து கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு பணம் தான் பிரதான காரணம் என்கிறார்களே..?

    அது அவர்​கள் இரு​வ​ருக்​கும் மட்​டும் தான் தெரிந்​தது என்​பதும் ஊரறிந்த ஒன்​று.

    உங்களை மீண்டும் பாமக-வில் இணைத்து கட்சியை பலப்படுத்த ராமதாஸ் முயற்சித்ததாகவும் அதற்கு அன்புமணி முட்டுக்கட்டை போட்டதாகவும் சொல்கிறார்களே..?

    அப்​படி ஒரு சம்​பவம் எது​வும் நடை​பெற​வில்​லை.

    திமுக-விடம் இம்முறை கூடுதல் தொகுதிகளைக் கேட்போம் என சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் சொல்கிறாரே?

    ஒவ்​வொரு கட்​சி​யும் ஏற்​கெனவே பெற்ற தொகு​தி​களைக் காட்​டிலும் கூடு​தலாகக் கேட்​பது இயல்​பானது. அப்​போது தான் கட்​சிகள் வளர முடி​யும். அதன் மூலம் கட்​சி​யின் முக்​கிய நிர்​வாகி​களுக்​கும் வாய்ப்பு கொடுக்​க​முடி​யும் என்ற அடிப்​படை​யில் பிர​தானக் கட்​சிகளிடம் கூடு​தல் தொகு​தி​களை கேட்​டுப் பெறு​வது என்​பது ஏற்​கெனவே உள்ள வழக்​கம் தான்.

    கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளை திமுக குறைக்காது என செல்வப்பெருந்தகை சொல்லி இருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

    இது திமுக மீதான செல்​வப்​பெருந்​தகை​யின் மிகப்​பெரிய நம்​பிக்​கை​யைக் காட்​டு​கிறது.

    அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் வைகைச் செல்வன் திடீரென திருமாவளவனை சந்தித்தது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

    ஓட்​டல்​களிலோ, விடு​தி​களிலோ அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் அரு​கருகே உள்ள அறை​களில் தங்​கும் போது, மாற்​றுக் கட்​சித் தலை​வர்​கள் மரி​யாதை நிமித்​த​மாக சந்​தித்​துப் பேசுவது தமிழக அரசி​யல் வரலாற்​றில் காலங்​கால​மாக உள்ள வழக்​கம் தான். அந்​தவகை​யில் திரு​மாவளவன் – வைகைச்​செல்​வனின் இயல்​பான சந்​திப்பை வைத்து திமுக கூட்​ட​ணி​யில் இருந்து திருமா வெளி​யேறுகி​றார் என்று பேசுவது நியாயமில்​லை. அதற்கு அவரே மறுப்​பும் தெரி​வித்​திருக்​கி​றார். திரு​மாவளவனின் அந்​தக் கருத்தை நாம் ஏற்​றுக் கொள்​ளலாம்.

    திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்திருப்பதாக வைகைச்செல்வன் சொல்கிறாரே?

    அது அவரது ஆசை. ஓட்டை விழ​வேண்​டும் என்​பது அதி​முக-​வின் எதிர்​பார்ப்​பு. கோட்​டையைப் பிடிக்க வைகைச்​செல்​வன் கண்​ணுக்​குத் தெரிந்த ஓட்டை வழி எங்​கள் கண்​களுக்​குத் தெரிய​வில்​லை​யே.

    கூட்டணியில் பாஜக இருப்பதால் தான் திருமாவளவன் அதிமுக கூட்டணிக்குப் போக யோசிக்கிறார் என்பதை ஏற்கிறீர்களா?

    இதை திரு​மாவளவனிடம் தான் கேட்​கவேண்​டும்.

    இத்தனை நாளும் திமுக அரசுக்கு ஆதரவாக இருந்துவிட்டு, இப்போது அதிக தொகுதிகள் வேண்டும், ஆட்சி நிர்வாகம் சரியில்லை என்றெல்லாம் ஆளும்கட்சிக்கு நெருக்கடியை உண்டாக்குவது அரசியல் ஆதாயத்துக்காகத்தானே..?

    வேல்​முரு​கன் எந்த ஆதா​யத்​தை​யும் எதிர்​நோக்கி அரசி​யல் செய்​வது கிடை​யாது. கலைக்​கல்​லூரி, சாலை வசதி என தொகுதி மக்​களின் தேவையறிந்து அதற்​கேற்ற வகை​யில் சட்​டமன்​றத்​தில் அரசுக்கு அழுத்​தம் கொடுத்து பெற்​றுக் கொடுப்​பது தான் எனக்கு வாக்​களித்த மக்​களுக்கு நான் செய்​யும் கடமை. அதைத் தான் செய்து வரு​கிறேன்.

    திராவிடக் கட்சிகளால் தமிழகம் பயனடைந்திருப்பதை மறுக்க முடியாது என நீங்கள் பேசி இருக்கிறீர்களே..?

    ஆம், திமுக, அதி​முக என இரண்டு கட்​சி​களின் ஆட்​சி​யிலும் மருத்​து​வக் கல்​லூரி, கலைக் கல்​லூரி, சாலை​கள், மேம்​பாலங்​கள் என தமி​ழ​கத்​திற்கு பல நன்​மை​கள் ஏற்​பட்​டிருக்​கிறது. அதைத் தான் நான் பேசி​யிருக்​கிறேன்.

    2026-ல், பாமக அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமையும் எனச் சொல்லி இருக்கிறாரே அன்புமணி?

    ஒவ்​வொரு முறை​யும் அரசி​யல் கட்​சிகள் தாங்​கள் அங்​கம் வகிக்​கும் கூட்​டணி தொடர்​பாக இப்​படி பேசுவது இயல்​பான ஒன்​று​தான். ஆனால், அவர்​கள் சொன்​னபடி நடந்​திருக்​கிறதா என்​ப​தைத் தான் ஆய்​வுசெய்ய வேண்​டும்.

    பரிசளிப்பு நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு அருகில் நின்று தவெக தலைவர் நடிகர் விஜய் படமெடுத்துக் கொண்டதை இத்தனை பூதாகரமாக்க வேண்டுமா?

    பூதாகர​மாக்​கிய​வர்​களிடமே அதை விட்​டு​விடு​கிறேன்.

    நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதை விமர்சனம் செய்திருக்கிறதே தவெக?

    சுபாஷ் சந்​திர​போஸ் அவர்​களை தலை​வ​ராக ஏற்​றுக்​கொண்ட ஃபார்​வர்டு பிளாக் கட்சி தொடங்கி தொல்​.​திரு​மாவளவன் மற்​றும் நான் உள்​ளிட்ட பலரும் தனி​யாக அரசி​யல் கட்​சிகளை தொடங்​கி, தனிச்​சின்​னம் கிடைக்​காத போது, பெரிய கட்​சி​களின் சின்​னங்​களில் போட்​டி​யிட்​டு, சட்​டமன்​றம் மற்​றும் மக்​களவைக்​குச் சென்று மக்​கள் பணி ஆற்​றி​யுள்​ளோம். அதன்​படி சட்​டப் பேரவை மற்​றும் மக்​களவைக்​குச் சென்று பணி​யாற்ற வேண்​டும் என்​ப​தற்​காக எனது முன்​னோர்​கள் பின்​பற்றிய வழியைத் தான் நான் பின்​பற்​றி​யுள்​ளேன். இதில் எந்​தத் தவறும் இல்​லை. என்​னை​விட பெரிய கட்​சிகள் எல்​லாம்​கூட இந்த வழி​முறையை பின்​பற்​றி​யுள்​ளனர்.

    ஒரு கட்சியின் தலைவராக இருந்து கொண்டு இன்னொரு கட்சியில் உறுப்பினராகி அந்தக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது சரி என நினைக்கிறீர்களா?

    இதற்​கான பதிலை ஏற்​கெனவே சொல்​லி​விட்​டேன்

    .

    இந்த முறையும் உதயசூரியனில் தான் போட்டியிட வேண்டும் என திமுக சொன்னால் என்ன செய்வீர்கள்?

    சொல்​லட்​டும்​… அப்​புறம் பார்க்​கலாம்.

    விஜய்யை மேடைகளில் தாக்குவதற்கு திமுக உங்களை ஆயுதமாக பயன்படுத்துவதாக சொல்கிறார்களே?

    திமுக அல்ல, எந்​தவொரு அரசி​யல் கட்​சி​யும் என்னை ஆயுத​மாக பயன்​படுத்த முடி​யாது. நான் தமிழ்த் தேசிய தளத்​தில் வளர்ந்து வருபவன். என்னை எவராலும் வளைக்க முடி​யாது. பிறரது எண்​ணங்​களை பேசுகின்ற ஆளாக​வும் என்னை மாற்ற முடி​யாது.

    ஆட்சிக்கு எதிரான அதிருப்திகள் இருப்பதால் இம்முறை திமுக-வுக்கு தேர்தல் களம் அத்தனை சுலபமாக இருக்காது என்று சொல்வதை ஏற்கிறீர்களா?

    அப்​படி​யில்​லை… தமி​ழ​கத்​தில் நான்​கு​முனை போட்டி ஏற்​படு​வதற்​கான சூழல் உள்​ளது. அப்​படி நான்கு அணி​களாக போட்​டி​யிடு​கிற​போது, திமுக தலை​மையி​லான கூட்​டணி வலு​வான மதச்​சார்​பற்ற மக்​கள் கூட்​டணி என்​ப​தால், இக்​கூட்​டணி வெற்​றி​பெறு​வதற்​கான வாய்ப்பு உள்​ளது.

    இந்தத் தேர்தலிலும் தோற்றுப் போனால் அதிமுக-வுக்கும் பழனிசாமிக்கும் எதிர்காலம் இல்லை என்கிறார்களே..?

    அப்​படிக் கூற​முடி​யாது. அலெக்​சாண்​டர் 17 முறை படையெடுத்து தோல்வி கண்​டு, பின்​னர் வென்ற வரலாற்றை நாம் படித்​திருக்​கி​றோம். ஓரிரு தேர்​தல்​களில் தோற்​ப​தால் அந்​தக் கட்சி மீண்​டும் எழாது எனக் கூறு​வ​தில் எனக்கு உடன்​பாடில்​லை. நேர்​மை​யாக உழைத்து மக்​கள் பணி​யாற்​றி​னால் மக்​கள் அதற்​குரிய அங்​கீ​காரத்தை வழங்​கு​வர். இது அதி​முக-வுக்கு மட்​டுமல்ல. அனைத்து அரசி​யல் கட்​சிகளுக்​கும் பொருந்​தும். 14 ஆண்​டு​கள் ஆட்​சி​யில் இல்​லாத திமுக மீண்​டும் ஆட்​சி​யைப் பிடித்த வரலாறை மறந்​து​விடக் கூடாது.

    திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அங்கே ஆத்ம திருப்தியுடன் இருப்பதாக உங்களால் சொல்லமுடியுமா?

    மக்​களுக்​கான பிரச்​சினை​களில், ஆளும்​கட்​சி​யுடன் கூட்​ட​ணிக் கட்​சிகளுக்கு சில கோப​தாபங்​கள் இருக்​கத் தான் செய்​யும். எனக்​கு, சாதி​வாரி கணக்​கெடுப்பை தமிழக அரசு நடத்​த​வில்லை என்ற கோப​முண்​டு. ஈழத்​தில் நடை​பெற்ற இனப்​படு​கொலை தொடர்​பாக சட்​டப்​பேர​வை​யில் தனி தீர்​மானம் இயற்​ற​வில்லை என்ற கோபமிருக்​கிறது. ஈழத்​தில் பொது​வாக்​கெடுப்பு நடத்த மத்​திய அரசை வலி​யுறுத்த வேண்​டும் என்ற கோரிக்​கைக்கு தமிழக அரசு செவி​சாய்க்​க​வில்லை என்ற கோபமிருக்​கிறது. சென்னை உள்​ளிட்ட பல்​வேறு பகு​தி​களில் வசித்து வந்த பூர்​வகுடி மக்​களின் இருப்​பிடத்தை இடித்​து, அவற்றை பன்​னாட்டு நிறு​வனங்​களிடம் அளித்​திருப்​ப​தி​லும் மாற்​றுக் கருத்து உண்​டு. இதே​போன்று திருச்​செந்​தூர் கோயில் குட​முழுக்​கை​யும், அர்ச்​சனையை​யும் தமி​ழில் தான் நடத்​தவேண்​டும் என சட்​டப்​பேர​வை​யில் பேசினேன். ஆனால் எனது கோரிக்​கைக்கு மாறாக, தமி​ழிலும் குட​முழுக்கு நடத்​தப்​படும் என்ற அமைச்​சர் சேகர் பாபு​வின் அறி​விப்​பில் எனக்கு உடன்​பாடில்​லை.

    எனவே, ஆளும் கட்​சி​யுடன், கூட்​ட​ணிக் கட்​சிகளுக்கு மாற்​றுக் கருத்து இருக்​கத் தான் செய்​யும். ஆனால் அதேசம​யம், பாஜக என்ற மக்​கள் விரோத கட்சி தமி​ழ​கத்​தில் கூட்​டணி அமைத்​து, தமிழ்​நாட்​டின் ஆட்சி அதி​காரத்தை கைப்​பற்​றி​விடக் கூடாது என்ற ஒற்​றைப் புள்​ளி​யில், மனக்​கசப்பை மறந்​து, மதச்​சார்​பற்ற மக்​களுக்​காக நாங்​கள் இந்த கூட்​டணி தொடர​வேண்​டும் என விரும்​பு​கி​றோம். எனவே, கூட்​ட​ணிக் கட்​சிகளுக்கு மன நிறைவு இல்லை என்​றாலும் மக்​களுக்​காக இணைந்து செயல்​படு​கி​றோம்.

    தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சியமைக்கும் என்கிறார் அமித் ஷா. ஆனால், கூட்டணி ஆட்சி எல்லாம் இல்லை என்கிறாரே இபிஎஸ்?

    அவ்​விரு கட்​சிகளுக்கு இடையி​லான குடுமிபிடி சண்டை தேர்​தல் நெருக்​கத்​தில் மாறலாம்.

    கூட்டணி ஆட்சி விவகாரத்தை வைத்தே தேர்தல் நெருக்கத்தில் பாஜக அணியைவிட்டு வெளியேறி தவெக-வுடன் அதிமுக கூட்டணி வைக்கும் என்கிறார்களே..?

    இப்​போது அதுகுறித்து உறு​தி​யாக, இறு​தி​யாக எதை​யும் கூற​முடி​யாது.

    அதிமுக – தவெக கூட்டணி அமைந்தால் இபிஎஸ் நிச்சயம் முதலமைச்சர் என்கிறார்களே அரசியல் நோக்கர்கள்?

    பல அரசி​யல் நோக்​கர்​களின் கருத்​துகளும், கருத்​துக் கணிப்​பு​களும் பொய்த்​துப் போயிருக்​கிறது. ஜனநாயகத்​தில் மக்​கள் தான் எஜமானர்​கள். அவர்​கள் வாக்​களித்து சட்​டப்​பேர​வை​யில் பெரும்​பான்​மையை நிரூபித்த பின்​னர் தான் எதை​யும் உறு​தி​யாகச் சொல்ல முடி​யும்.

    ஒருவேளை, திமுக-வுடனான கூட்டணி முறிந்து போனால் தவாக-வின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும்?

    தமிழக வாழ்​வுரிமைக் கட்சி என்​பது மக்​களுக்​கானது. எங்​களது தேர்​தல் அரசி​யல் பங்​களிப்பு என்​பது 10 சதவீதமே. சாமானிய மக்​களின் குரலாக ஒலிப்​பதும், சாமானிய மக்​களுக்கு ஏதி​ரான ஆதிக்க சக்​தி​களை எதிர்த்​துப் போராடி நியா​யம் பெற்​றுத் தரு​வதும் தான் எங்​கள் கொள்​கை. அதனால் நாங்​கள் தேர்​தல் அரசி​யல் குறித்து அதி​கம் அலட்​டிக் கொள்​வ​தில்​லை. தேர்​தல் காலத்​தில் அரசி​யல் நிலைப்​பாடு குறித்து முடி​வெடுப்​போம். அது​வரை தமிழ் மக்​களுக்​காக குரல் கொடுப்​போம். தேர்​தல் அரசி​யலில் வாய்ப்​புக் கிடைத்​தால் சட்​டப்​பேர​வை​யில் எடுத்​துரைப்​போம்.

    முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தி பாஜக அணிக்கு ஆதரவு திரட்டுவதை வேல்முருகனாக எப்படி பார்க்கிறீர்கள்?

    இத்​தனை ஆண்​டு​கள் இல்​லாத விதமாக இப்​போது முரு​கனை வழிபடு​வதன் மூலம் கோடிக்​கணக்​கான முருக பக்​தர்​களை தன் பக்​கம் இழுப்​ப​தற்​கான அரசி​யல் நாடகத்தை அரங்​கேற்​றுகிறது பாஜக. இது ஏற்​புடையதல்ல.

    ஒரு சில அதிகாரிகள் இந்த அரசுக்கு கெட்ட பெயரை உண்டாக்க முயற்சிக்கிறார்கள் என்ற உங்களின் குற்றச்சாட்டு இன்னும் அப்படியே இருக்கிறதா?

    அப்​படியே தான் உள்​ளது. பல அதி​காரி​கள் தன்​னாட்சி நடத்​திக் கொண்​டிருக்​கி​றார்​கள். நான் முன்பு சொன்​னது போல ஓர் அதி​காரி கைதும் செய்​யப்​பட்​டிருக்​கிறாரே!



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ‘கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்?’ – ‘ப’ வடிவ இருக்கை குறித்து அன்புமணி கருத்து

    July 13, 2025
    மாநிலம்

    ஓராண்டுக்கு மேலாகியும் பி.எட். பட்டச் சான்றிதழ் வழங்கப்படவில்லை: அரசுக்கு அன்புமணி கண்டனம்

    July 13, 2025
    மாநிலம்

    மேட்டூர் அணையில் உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தம்: பாசனத்துக்கு 22,500 கன அடி நீர் திறப்பு

    July 13, 2025
    மாநிலம்

    ‘சாரி மா மாடல் சர்க்கார்’ – அஜித்குமாருக்கு நீதி கேட்கும் போராட்டத்தில் திமுக மீது விஜய் விமர்சனம்

    July 13, 2025
    மாநிலம்

    பொது கலந்தாய்வு மூலமாக 405 சிறப்பு ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கல்

    July 13, 2025
    மாநிலம்

    புதிதாக பணியில் சேருவோருக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகை: பிஎப் மண்டல ஆணையர் தகவல்

    July 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்?’ – ‘ப’ வடிவ இருக்கை குறித்து அன்புமணி கருத்து
    • கல்லீரல் சேதத்தை ஏற்படுத்தும் 3 பழக்கங்கள், அதில் ஆல்கஹால் இல்லை – இந்தியாவின் நேரங்கள்
    • எலோன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் க்ரோக் மற்றும் எக்ஸ் ஒருங்கிணைப்புடன் AI பேரரசை விரிவுபடுத்துவதற்காக XAI இல் billion 2 பில்லியனை முதலீடு செய்கிறது, மதிப்பீட்டை 3 113 பில்லியனாக உயர்த்துகிறது | அறிக்கை | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பிஹார் வாக்காளர் பட்டியல் திருத்தம்: வெளிநாட்டினர் அதிகம் கண்டறியப்பட்டதாக தேர்தல் ஆணையம் தகவல்
    • ஆஸி.யை 225 ரன்களில் சுருட்டிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி: பகலிரவு டெஸ்ட்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.